Breaking

Friday

செப்டம்பருக்குள் கிழக்கில் 1700பட்டதாரிகள் ஆசிரியராவார்கள்! கடைநிலையிலுள்ள கிழக்கின் கல்வியை மீளக்கட்டியெழுப்ப வாரீர்!


கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் செப்டம்பரில் 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும். இலங்கையில் கடைநிலையிலுள்ள கிழக்குமாகாணக்கல்வி நிலையினை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம கல்முனையில் அறைகூவல் விடுத்தார்.

கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழினுட்பக்கல்வி முள்பள்ளிக்கல்வி விளையாட்டு பண்பாட்டலுவல்கள் இளைஞர்விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்  2017ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாவின் முதல் நாள் மாலை நிகழ்வின் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டுரையாற்றியபோது ஆவுர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நேற்றுமுன்தினம் (31) திங்கட்கிழமை மாலை  முதல்நாள் மாலை நிகழ்வு கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில்  கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில்  கோலகலமாக நடைபெற்றது.

; கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி மாகாண சபையின் தவிசாளர் ஏ.பி.சந்திரதாசகலப்பதி வீதிஅபிவிருத்தி அமைச்சர் ஆரியவதிகலப்பதி ஆளுநரின் செயலாளர் ஜே.ஜே..முரளிதரன கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான எம்.ஜ.எம்.மாஹிர் சட்டத்தரணி ஆரிப்சம்சுதீனஉள்ளிட்ட அதிதிகள் கலந்துசிறப்பித்தனர்.

அங்கு ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்:

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்கலை மட்டக்களப்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.அதேவேளை நேற்று மட்டக்களப்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனையும் கண்டு பேசியுள்ளேன்.
கிழக்கு மாகாணம் பலகோடி ருபா செலவில் அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.

கல்விச்செல்வம் செல்வத்துள் செல்வம். அதனை யாரும் களவுசெய்யமுடியாது.அடித்துப்பற்றிக்கவும்முடியாது. கலைகலாசாரங்களை வெளிக்கொணரும் வல்லமை கல்விக்கு உள்ளது. எனவே கல்விநிலையை உயர்த்த அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

இங்கு இடம்பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தரமானவை. அவரவர் கலைகலாசாரங்களை வெளிப்படுத்தின. இதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம். என்றார்.
அமைச்சர் ஆரியவத்தி கலப்பதியும் உiiயாற்றினார்









செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog