Breaking

Friday

இம்மாதமுடிவிற்குள் வர்த்தமானிப்பிரகடனம் செய்யப்படும்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவர் கலாநிதி ஜெமில் கூறுகிறார்.


(காரைதீவு  நிருபர் சகா)*

 சாய்ந்தமருது உள்ளுராட்சிசபைக்கான வர்த்தமானிப்பிரகடனம் இம்மாத முடிவிற்குள்
வெளியிடப்படும். இது உறுதி.*
இவ்வாறு சாய்நதமருது உள்ளுராட்சிசபை தொடர்பான அவசரமாகக்கூட்டிய  ஊடகவியலாளர்
மாநாட்டில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவர் கலாநிதி ஜெமில்
தெரிவித்தார்.*

இவ் ஊடகவியலாளர் மாநாடு சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் வளாகத்திலுள்ள அலுவலக
கேட்போர்கூடத்தில் (21) திங்கட்கிழமை இரவு 7மணிக்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு
பெரிய பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா(ஓய்வநிலை அதிபர்)
தலைமையில்  நடைபெற்றது.*

அங்கு கலாநிதி ஜெமீல்  மேலும் தெரிவிக்கையில்:*
சாய்ந்தமருது பிரதேசபைக்கான கோரிக்கை என்பது இன்றுநேற்றல்ல. பலவருடங்களாக
முஸ்லிம் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்தது. *

எனினும் சிறுதாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் எமது கட்சியான அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட்பதியுதீன் இக்கோரிக்கையை ஏற்று
உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவைச்சந்தித்து அவரை இங்கு வரவழைத்து அவர்
வாயால் உறுதிமொழியைப் பெற்றார்.*

கடந்தவாரம் அவரும் நானும் கொழும்பு முன்னாள் ஆணையாளர் உமர்காமிலும் சேர்ந்து
அமைச்சர் பைசர்முஸ்தபாவைச் சந்தித்தோம். அச்சந்திப்பில் இம்மாதமுடிவிற்குள்
சாய்ந்தமருதுக்கான பிரதேசசபை வர்த்தமானிப்பிரகடனம் செய்யப்படும் என்ற
வாக்குறுதியை எங்களிடம் வழங்கினார்.*
இப்பரதேச மக்கள் காலாகாலமாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசுக்கு
வாக்களித்தவர்கள்.பல தசாப்தகாலமாக நிலவும் இக்கோரிக்கையை அன்று
வென்றுகொடுத்திருக்கவேண்டியது அவர்களது கடமை.*
ஆனால் இன்று யார் பெயர் வைப்பது என்ற  போட்டி நடக்கிறது. அல்லாஹ் பெரியவன்.
அவனுக்குத் தெரியும் இதுவிடயத்தில் யார் கூடுதலாகச் செயற்றபட்டவர்கள் என்று.*

இவ்வர்த்தமானிப்பிரகடனம் எதிர்வரும் 28ஆம் திகதி வெளிவரவிருந்தது.இ
 அதற்கிடையில் மு.கா.தலைவர் இன்று காலை இப்பள்ளிவாசல் தலைவரிடம் 23ஆம் திகதி
வர்த்தமானிப்பிரகடனம் செய்யவுள்ளதாக கூறியுள்ளாராம்.*

எமது தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் நாங்கள் அமைசச்ர்
பைசர்முஸ்தபா நாடுதிரும்பியதும் 22ஆம் திகதி சந்தித்து வர்த்தமானிப்பிரகடனத்தை
துரிதப்படுத்துமாறு கேட்விருக்கின்றோம். நாம் யாரையும் எதிர்ப்பாக
பார்க்கவில்லை. என்றார்.*
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog