Breaking

Wednesday

கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதிநாள் விருதுவழங்கும் பெருவிழா!


காரைதீவு நிருபர் சகா

கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழினுட்பக்கல்வி முள்பள்ளிக்கல்வி விளையாட்டு பண்பாட்டலுவல்கள் இளைஞர்விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்  பண்பாட்டலுவலுவல்கள் திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாவின் இறுதி மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று  ஆகஸ்ட் 2ஆம் திகதி புதன்கிழமைகாலை 9.30க்கு ஆரம்பமாகின்றது.

இன்று காலை 9.39மணிக்கு கவியரங்கு கவிஞர் சோலைக்கிளி தலைமையில் நடைபெறவுள்ளது.
நாங்களும் பாடுவோம் எங்கள் நா வரண்டுவிடவில்லை எனும் தலைப்பில்
9கவிஞர்கள் கவிபாடுவார்கள்.

மாலைநிகழ்வு!

மாலை நிகழ்விற்கு கிழக்குமாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமைதாங்க
பிரதமவிருந்தினராக கல்வி இராஜாங்கஅமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன்
கலந்துசிறப்பிக்கவிருக்கிறார்.

அங்கு விருது வழங்கும் நிகழ்வு முக்கிய இடம்பிடிக்கிறது.
கலைஇலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான
பரிசுவழங்கும் நிகழ்வு சிறந்ததமிழ் நூல்தேர்வுக்கான பரிசுவழங்கல்
இளங்கலைஞர் விருது வழங்கும் விழா வித்தகர் விருது வழங்கும் விழா
என்பவற்றோடு இலக்கியவிழா ஞாபகார்த்தமலர் வெளியீடு என்பனவும்
நடைபெறவுள்ளது.
 மேலும் பல கலைநிகழ்ச்சிகள் மேடையேறவுள்ளன.

இன்றைய கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விழாவில் விருது பெறவுள்ளோர் விபரம்!


.
கிழக்கு மாகாண வித்தகர் விருதுக்கு தெரிவாகியுள்ளோர் விபரம்:

திருமதி கமலேஸ்வரி தவராஜரெட்ணம் (சாஸ்திரிய நடனத் துறைக்கு –பரதம்)
மாசிலாமணி கந்தசாமி (சிற்பத்துறைக்கு)
ஜனாப் காசி முஹம்மது முஹம்மத் பாறூக் (ஆக்க இலக்கியத் துறைக்கு)

கதிராமத்தம்பி மயில்வாகனம் (கூத்து கிராமிய கலைத்துறைக்கு)
சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் (கலை இலக்கிய பல் துறைக்கு)
திருமதி தேவிகாராணி முருகுப்பிள்ளை (இசைத்துறைக்கு)
ஆதம்பாவா மீராகிபு (அசனார்) (இலக்கியத்துறைக்கு)
அப்துல் காதர் முகம்மது இப்ராஹீம் (இலக்கியத்துறைக்கு)
மாணிக்கம் வரதராஜா (இலக்கியத்துறைக்கு)
உதுமா லெப்பை முகம்மது அதீக் ( இலக்கியத்துறைக்கு)
சுப்பிரமணியம் அரசரெத்தினம் (இலக்கியத்துறைக்கு)
ஹாமிது லெப்பை அப்துல் குத்தூஸ் (கலை இலக்கிய பல் துறைக்கு)


இளங்கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோர் விபரம்
லக்ஸ்மன் சஞ்ஜித் (இசைத்துறைக்கு)
வெற்றிவேல் சசிகரன் (ஆக்க இலக்கியத்துறைக்கு)
கமால்தீன் நௌஷாத் (பாடலாக்கத் துறைக்கு)
மகேந்திரன் கேதீஸ்வரன் (கூத்து கிராமியக்கலைத் துறைக்கு)
தங்கராசா ஜீவராஜ் (ஆவணமாக்கல் துறைக்கு)
தில்லைநாதன் பவித்ரன் (இலக்கியத் துறைக்கு)
திருமதி கலைமகள் சக்தீபன் (பரதத் துறைக்கு)
அகமது லெப்பை அன்ஸார் (கலை இலக்கிய பல்துறைக்கு)
பிர்தௌஸ் ஹஸன் அகமட் ஷpப்லி (ஆய்வுசார் செயற்பாடு துறைக்கு)
யோகேஸ்வரன் ஜகதாரினி (நடனத்துறைக்கு)

சிறந்த தமிழிலக்கிய நூல்களுக்கான பரிசு விபரம்
எம்.எம்.நௌஷாத் (சுயசிறுகதை –சொர்க்கபுரிச் சங்கதி)
சீ.கோபாலசிங்கம் (கவிக்கோ வெல்லவூர்க் கோபால்)- வரலாற்று நூல்மட்டக்களப்பு தேசம் வரலாறும் வழக்காறும்
பேராசிரியர் மானாகப்போடி செல்வராஜா( பாடசாலை முகாமைத்துவம் - அறிவியலும் தொழில் நுட்பமும்)
ஜே.வஹாப்தீன் (சுயநாவல் -குலைமுறிசல்)
கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்( நானாவித நூல்-ஆயிரம்வேரும் அருமருந்தும் மருத்துவச் சுருக்கம்)
வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் (புலமைத்துவம் மற்றும் ஆய்வுசார் படைப்பு – கொட்டியாபுரப்பற்று முதுசங்கள்)
மூத்ததம்பி அருளம்பலம் (ஆரையூர் அருள –சமயநூல் இறையின்பப் பாவாரம்)
சோ.இராசேந்திரம் (தாமரைத்தீவான் -சுயகவிதை –பொன்னகம் மீட்போம்)
திருமதி இந்திராணி புஸ்பராஜா ( சிறுவர் இலக்கியம் - சிறுவர் பூங்கா)
ஆகியோர் கிழக்குமாகாண தமிழிலக்கிய விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog