Breaking

Thursday

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்கீடு.


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைவாக பாலமுனை நெசனல் விளையாட்டு மைதானம் மற்றும் சௌவ்ன்டர்ஸ் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை புனரமைப்புச் செய்வதற்காக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினூடாக தலா 10 இலட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இப்புனரமைப்புப் பணிகளை வினைத்திறனாகவும், மிகத் திட்டமிட்ட முறையிலும் முன்னெடுக்கும் நோக்கில் குறித்த மைதானங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருடன் அன்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். 

இதன்போது நடைபெறவுள்ள அபிவிருத்தி தொடர்பாக தன்னுடைய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருடன் பரிமாறிக்கொண்டார்.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog