Breaking

Monday

சகல கட்சிகளும் கிழக்கில் போட்டிட்டால் மக்கள் கையேந்தும் நிலைவரும் !!


கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் ஓய்ந்திருந்த அபிவிருத்தி அலை இப்போது மீண்டும் அம்பாறையில் ஓய்வின்றி அடிக்கத்தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் முதல் பகுதியில் இடம்பெற இருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலை மையமாக கொண்டு முஸ்லிம் மக்களின் பிரதான மூன்று காங்கிரஸ்களும் இப்போது கிழக்கில் தமது தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

கிழக்கை தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதும் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி தனது செல்வாக்கை நிருபிக்கவேண்டியதுமான கட்டாய நிலையில் இந்த போட்டியை சந்திக்கிறது. மு.கா கிழக்கில் மிகப்பலமான அணியாக இருக்கிறது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டாலும் முஸ்லிம் காங்கிரசில் மூன்று எம்.பிக்களும் இரண்டு பிரதியமைச்சர்களும் இருப்பதால் அப்போதும் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரமிக்க கட்சியாக கிழக்கில் இருக்கும்.

அம்பாறையை கோட்டையாக கொண்ட மு.கா கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் பல பிழையான காய்நகர்த்தல்களை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டு வருவது மு.காவின் செல்வாக்கில் சிறிய சரிவை காட்ட தவறாது என்பது காலம் உணர்த்த இருக்கும் உண்மை. 

அந்த வரிசையில் கொல்லிமலை சிலை விவகாரம்,சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை,காரியாலயங்களின் இடமாற்றம், கல்முனை அபிவிருத்தியில் அக்கறையின்மை முஸ்லிங்களின் முக்கிய பிரச்சினைகளின் போது மௌனம் என பட்டியல் நீள்வதை சகலரும் அறியாமளுமில்லை..

அம்பாறையில் கடந்த பொதுத்தேர்தலை தனது கன்னித்தேர்தலாக எதிர்கொண்ட மயில் 33000 க்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. மு.கா மீது இருந்த அதிருப்தியும், அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ்வின் மஹிந்த சார்ந்த போக்கும்,சரியான தருணத்தில் சரியானவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட கட்சி கொள்கைகளும், தூய்மையான அரசியல் போக்குடையவர்களின் ஈடுபாடும் மயில் கட்சிக்கு பாரிய பக்கபலக்மாக அமைந்ததுடன் மேற்சொன்ன காரணங்களின் அதிகூடிய செல்வாக்குமே மயிலின் அம்பாறை அரசியலுக்கு வித்திட்டது. மயிலை ஆதரித்த மக்களின் பாரிய எதிர்பார்ப்பாக இருந்த விடயங்களாவன :

மு.காவால் செய்யப்படாத அபிவிருத்தியை மயில் கட்சி செய்யும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அத்துடன் பலமிக்க அமைச்சராக இருந்த றிசாத் தமது தேவைகளை பூர்த்தி செய்வார் என்கின்ற ஏக்கம் இருந்தது. ஆனால் சதோசவையும்,அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தையும் அம்பாறையின் சில பிரதேசங்களில் வெகுவாக திறந்துவைத்த மயில் கட்சி தமக்கு தாமே ஆப்பை சொருகிகொண்டது எனலாம்.

இதன் மூலம் அப்பிரதேச வர்த்தகர்களின் வியாபாரத்தில் மாற்றம் ஏற்பட்டதையும் அதன் மூலம் அந்த வியாபாரிகளின் குடும்பத்தின் செல்வாக்கையும் மயில் தக்கவைக்க தவறியதை மக்களோடு மக்களாக பழகும் எவரும் மறுக்கமுடியாது. இதன் மூலம் மக்கள் காங்கிரசின் சிலர் தொழில்வாய்ப்பை பெற்றதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

குறிப்பிட்டு சொல்லும் அளவிற்க்கு மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் எந்தவித சேவையையும் செய்யாமல் இருந்து வந்ததும், சேவைகள் செய்வதை மு.கா எம்.பிக்கள் தடுக்கிறார்கள் என குற்றம் சாட்டியபடியே காலத்தை கடத்தியதும், அமைச்சர் ரிசாத்தின் பொய்யான மேடை வாக்குறுதிகள் என பலதும் மக்கள் காங்கிரஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கசெய்திருக்கிறது.

 அத்துடன் அம்பாறையில் மயிலுக்கு கூடுகட்டி தீனிபோட்ட பலரும் இன்று மயிலின் இயலாமையை உணர்ந்து மௌனம் சாத்தித்து வருவதும்,வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்பட இரகசியமாகவும்,பகிரங்கமாகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதும் மயிலுக்கு கிழக்கு தேர்தலில் பாரிய சரிவை காட்டும்.

என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் காலம் உணர்த்தும் என்பதுடன் கட்சி பதவிப்போட்டிகளை மறந்து ஒற்றுமையாக உழைத்தால் அம்பாறையில் ஒரு ஆசனமாவது பெற்று மயில் தனது அம்பாறை அரசியலை தக்கவைக்கும்.(இந்த கூற்றை மஞ்சள் கவர் எழுத்தாளர்கள் தவிர்த்து அரசியல் தெரிந்த சகலரும் ஏற்றுகொள்வர்.)

கடந்த காலங்களில் கிழக்கின் மன்னனாக இருந்த மு.அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் தோல்வியின் பின்னர் குதிரைக்கு சோதனை காலமாக கடந்த சில வருடங்கள் கடந்து போகின.....  கிழக்கின் அமைச்சராக இருந்த கௌரவ உதுமாலெப்பை தனது அமைச்சை இழந்து எதிர்கட்சி தலைவராக மாறியது முதல் பல சோதனைகளை அனுபவித்த குதிரை முடக்குதிரையாகி ப்போனதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தாலும் இப்போது அடிபட்டு முடங்கி கிடந்த குதிரை தனது எல்லைகளையும் தாண்டி பயணப்பட ஆரம்பித்துள்ளதானது ஏனைய காங்கிரஸ் காரர்களுக்கு சின்ன அச்சத்தை தொற்றுவிக்காமலுமில்லை.

 கிழக்கில் மட்டும் சுத்திவந்த குதிரை மீலேளுச்சி பெற்று அண்மையில் வடக்கு மண்ணிலும் கால்பத்தித்து வந்துள்ளதுடன் இளம் சக்திகளை உள்வாங்கி மீண்டும் சவாரி செய்ய முன்வந்துள்ளது.நல்ல ஆரம்பமாக பார்க்கமுடிந்தாலும் அதன் மீள் எழுச்சி எந்த வகையில் வெற்றியை தரும் என்கின்ற கேள்வி இப்போது பலமாக எல்லோருடைய மனதிலும் இருக்கிறது.

கிழக்கில் மு.கா மூன்று எம்.பிக்களும்,இரண்டு பிரதியமைச்சர்களையும் கொண்டுள்ளதுடன் ம.காங்கிரஸ் ஒரு எம்பியையும் ஒரு பிரதியமைச்சரையும் கொண்டுள்ளது ஆனால் தே.காங்கிரஸ் எந்த அதிகாரமுமில்லாது தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 

முந்தைய காலங்களில் திகாமடுல்ல மாவட்டத்தில் குதிரை வெற்றிலையுடன் கூட்டிணைந்து தொகுதிக்கு ஒருவர் எனும் திட்டமிடலுடன் மு.காவை மட்டும் பலமான அணியாக  தேர்தல் களத்தில் சந்தித்து போராடி தமது இருப்பை கடந்த இரண்டு சபைகளிலும் ஒவ்வொரு சபைக்கும் மூவராக அனுப்பி சாதித்தது.

ஆனால் இந்த மாகாண சபையில் மும்முனை போட்டி நிகழ இருப்பது அம்பாறையில் பாரிய சவாலாக சகல கட்சிகளுக்கும் இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்துக்க்களுமில்லை. (இன்னும் சில தினங்களில் சமூக வலைத்தளங்களில் முகவரியற்ற கணக்குகளின் ஆதிக்கத்துடன் அனல் பறக்கும் பிரச்சாரத்தை இந்த உலகம் பார்க்க இருக்கிறது.)

கிழக்கே முஸ்லிங்களின் தாயகம் என்பதால் இந்த மாகாணசபை உலகமே உற்றுநோக்கும் சபையாக இருப்பதால் முஸ்லிம் கட்சிகள் தமது ஆளுமைகளுக்கு அப்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog