Breaking

Wednesday

அம்­பாறை மாவட்­டத்­தில் நீண்­ட­கா­ல­மாக நில­வி­வரும் காணிப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு.............


(பிறவ்ஸ்)

அம்­பாறை மாவட்­டத்­தில் நீண்­ட­கா­ல­மாக நில­வி­வரும் காணிப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணும் நோக்கில், ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், உய­ர்­மட்ட கு­ழு­வுடன் (24) திங்­கட்­கி­ழ­­மை கள விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டார்.

அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, வன பரிபாலன திணைக்கள பணிப்பாளர் ஏ.ஆர்.என் முனசிங்க உள்­ளிட்ட அதி­கா­ரிகள், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள், தொல் பொரு­ளியல் திணைக்­கள அதி­கா­ரிகள், நில அளவைத் திணைக்­கள அதி­கா­ரிகள் உள்­ளிட்ட உயர்­மட்ட குழு­வினர் சர்ச்­சைக்­கு­ரிய இடங்­க­ளுக்கு சென்று கல­நி­ல­வ­ரங்­களை நேரில் கண்­ட­றிந்­து­கொண்­ட­னர்.

கா­லை 8.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி­வரை உண­வுக்குகூட நேரம் ஒ­துக்­கா­மல், மக்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள வட்டமடு, கிரான் கோமாரி, வேகாமம், ­பாலை­யடி வட்­டை மற்­றும் கரங்கோ போன்ற ­இ­டங்­க­ளுக்கு சென்ற குழு­வினர் நேரில் சென்­றனர். அங்கு சம்­பந்­தப்­பட்ட காணி உரி­மை­யா­ளர்­களை சந்­தித்து, பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்து ஆரா­ய்ந்­த­னர்.

வன பரி­பா­லன திணைக்­க­ளத்­தினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சர்ச்­சைக்­கு­ரிய காணி­களை நிள அள­வைத் திணைக்­களம் மூலம் மீண்டும் அள­வீடு செய்து, வன ஜீவ­ரா­சிகள் திணைக்களம் ஆட்­சே­பனை தெரி­விக்­காத பட்சத்தில், காணி உத்­த­ரவுப் பத்­தி­ரங்­க­ளுக்கமைய ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளின் காணி­களை விடு­விப்­ப­தாக அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் தெரி­வித்தார். கா­ணிகளை அள­வீடு செய்­வ­தற்­காக, காணி அமைச்­சருடன் பேசி, அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து தரு­வ­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்­போது உறு­தி­ய­ளித்­தார்.

இதே­வேளை, வர்த்­த­மானி அறி­வித்­தல்­களில் ஏற்­பட்­டுள்ள குள­று­ப­டி­களை ஏற்­றுக்­கொண்ட அதி­கா­ரிகள், ஒரு­சிலர் பொது­மக்கள் போலி­யான காணி ஆவ­ணங்­களை வைத்­தி­ருப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டினர். இதனை பரிசீ­லித்து, மக்­க­ளுக்­கு ஒதுக்­கப்­பட்­­டுள்ள காணி­களை விடு­­விப்­ப­தற்­காக அனைவரின் காணி ஆவ­ணங்­க­ளையும் ஒன்­று­தி­ர­ட்­டு­மாறு காணி உரி­மை­யா­ளர்­களுக்கு அமைச்சர் உத்­த­ர­விட்­டார்.

காணி ­அ­னு­ம­திப்­பத்­தி­ரங்­கள் மூலம் காணி­களை பெற்­றுக்­கொண்டவர்கள், யுத்தம் கார­ணடார் பயிர்­செய்­கையில் ஈடு­ப­டாது கைவிட்­டுள்ள நிலையில் அவை காடு பிடித்துள்­ளதால் வன பரி­பாலன திணைக்­க­ளமும், அவை யானை­களின் வழிப்­பா­டாக இருப்­பதாக காரணம் காட்­டி வன ஜீவ­ராசிகள் திணைக்­க­ளமும் மக்­களின் காணி­களை சுவீ­க­ரித்­துள்­ள­து. இந்­நி­லையில், ­வர்த்­த­மானி அறி­வித்­தல் குள­று­ப­டி­யினால் வட்­ட­மடு காணி விவ­காரம் தமிழ் – முஸ்லிம் மக்­க­ளி­டையே பி­ரச்­சி­னையை தோற்­று­வித்­தி­ரு­ப்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­து.

கிழக்கு மாகாண காணிப்­பி­ரச்­சி­னை­க­ளை தொடர்­பாக பெப்­ர­வரி 23ஆம் திகதி அமைச்சர் ரவூப் ஹக்­கீம் தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற உயர்­மட்ட குழு­வி­ன­ரு­ட­னான கலந்­துரையாடலின் பின்­னரே, இந்த கள விஜயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­து. காணிப்­பி­ரச்­சி­னைகளுக்கு தீர்­வு­காண்­ப­தற்­கா­க சம்­பந்­தப்பட்ட சகல அதி­கா­ரி­களையும் அமைச்சர் ஒரு­வர் நேரில் அழைத்துச் சென்­றது இதுவே முதல்­த­ட­வை­யா­கும்.

இவ்­வி­ஜ­யத்தில் பாரா­ளு­மன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், எம்.ஐ.எம். மன்­சூர், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான ஆரிப் சம்­சு­தீன், ஏ.எல். தவம், அமைச்சின் இணைப்புச் செயலாளர் யூ.எல். முபீன், ­கட்­சி­யின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, உயர்­பீட உறுப்­பினர் பளீல் பி.ஏ., ­கட்சி முக்­கி­யஸ்­தர்கள், பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், பாதிக்­கப்­பட்ட மக்கள் என பலரும் கலந்­து­கொண்­ட­னர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog