Breaking

Tuesday

புதிய ஏவுகணைச் சோதனையை நடத்தியது வட கொரியா! அதிரும் உலக நாடுகள்.



இன்னும் சில நாள்களில் ஜி-20 மாநாடு நடக்க உள்ள நிலையில், வட கொரியா புதிய ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. 

வட கொரியாவின் மேற்குப் பகுதியான பாங்கியானிலிருந்து இந்தப் புதிய ஏவுகணைச் சோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏவுகணை, கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய திறன் படைத்தது என்றும் யூகிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர், ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் வட கொரியா, தொடர் ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடக்க உள்ள ஜி-20 மாநாட்டில், வட கொரியா செய்து வரும் தொடர் ஏவுகணைச் சோதனைகுறித்து விவாதிக்கப்போவதாக சர்வதேச நாடுகள் கூறிய நிலையில்தான், இந்த ஏவுகணைச் சோதனையை நிகழ்த்தியுள்ளது வட கொரிய அரசு. அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள், ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ளது.

by-vikatan
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog