Breaking

Friday

பாடசாலைகள் அனைத்திலும் விரல் அடையாள இயந்திரங்கள்...


நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்திலும் உள்செல்தல் மற்றும் வெளிச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கு விரல் அடையாள இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் விரல் அடையாள இயந்திரத்தை பொருத்துவதற்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம். நிசாம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த இயந்திரத்தை பாடசாலை அபிவிருத்திக்குழு நிதியிலிருந்து கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த இயந்திரத்தை பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல, 03/2017 இன் பிரகாரம் வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் விரல் அடையாளப் பதிவு இயந்திரத்தை உபயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் வலயங்கள் அதன் அதிபர்களை அழைத்து இவ்வறிவித்தலை கூறியுள்ளன.

இதன்படி சம்மாந்துறை வலயம் விசேடமாக கூட்டமொன்றைக் கூட்டி, குறித்த கூட்டத்தில் சகல அதிபர்களுக்கும் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள அரசாங்க அலுவலகங்களிலும் விரல் அடையாள இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog