Breaking

Saturday

சாய்ந்தமருது வைத்தியசாலையை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளியோம்!


*காரைதீவு நிருபர் சகா*

*40வருடங்கள் பழைமைவாய்ந்த சாய்ந்தமருது மாவட்டவைத்தியசாலையை வேறெந்த
வைத்தியசாலையுடனும் இணைப்பதற்கோ அல்லது உப அலகாக இயங்குவதற்கோ நாம் ஒருபோதும்
இடமளிக்கமாட்டோம். 

*இவ்வாறு நேற்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை சாய்ந்தமருது ப.நோ.கூ.சங்கக்
கட்டடத்தில் சாய்ந்தமருது சூறா சபை நடாத்திய செய்தியாளர் மாநாட்டில்
திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.*

*சூறாசபையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் அங்கு சாய்ந்தமருது மாவட்ட
வைத்தியசாலையின் ஆரம்பம் மற்றும் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக விளக்கமாக
விபரித்து இணைப்பு தமது சாய்ந்தமருதின் அடையாளத்தை இழக்கச்செய்துவிடும்
என்றும் தெரிவித்தார்.*

*சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையுடன் இணைத்து
முறிவுவைத்தியசாலையாக மாற்ற சுகாதார பிரதியமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கை
தொடர்பில் இவர்களது செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது.*

*சபையின் செயலாளர் சதாத் விரிவாக இணைப்பால் ஏற்படும் ஆபத்து அதனாலேற்படும்
பாதகம் பற்றி விரிவாக விளக்கமளித்தார்.*

*முடியுமானால் இவ்வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக தரமுயர்த்த உதவுங்கள்
என்றும் அதில் கேட்டுக்கொண்டனர். சாய்ந்தமருது பிரதேச சபையின் கோரிக்கையை
வலுவிழக்கச்செய்யும் ஒரு சதிவேலையாகவே நாம் இதனைப்பார்க்கின்றோம் எனவும் அங்கு
கருத்துத் தெரிவிக்கப்பட்டது.*

*செய்தியாளர்களின் வினாக்களுக்கும் சபையினர் பதிலளித்தனர்.*
*தாம் அறிந்தவகையில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சரோ பள்ளிவாசல் நிருவாகமோ
இதற்கு எவ்வித ஒப்புதலையும் வழங்கவில்லை என அறிகின்றோம் என சபையினர்
தெரிவித்தனர்.*

*எதுஎப்படியிருப்பினும் இணைப்பை நாம் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை. அதனையும்
மீறிசெய்யமுற்பட்டால் மக்கள்போராட்டமாக உருவெடுக்கும். என்றார்கள்.*



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog