Breaking

Friday

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த யார் தடை.....!


(ஏ.எல்.றியாஸ்)
சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி பெண்களின் கல்வியினை முன்னேற்றும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேசிய போது அவர் முஸ்லிம் பெண் மாணவிகளின் கல்வியில் அக்கரையற்று செயற்படுவது குறித்து பெரிதும் கவலையடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.

அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை ஒரு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி எமது பிரதேச பெண் மாணவிகளுக்கு சிறந்த கல்வியினை வழங்கும் நோக்குடன் அண்மைக்காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

இந்தவிடமாக மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சரை சந்தித்துப் பேசி அதற்கான அனுமதிகளையும், உத்தரவாதத்தினையும் அமைச்சரிடத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ள நிலையில் குறித்த பாடசாலை கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பாடசாலையாக இருப்பதனால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினுடைய அனுமதி மிகவும் அவிசியமாகவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அனுமதியினை பெறுவதற்காக நேற்று (19) கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேசிய போது அந்தவிடயத்திற்கு அவர் முக்கியத்துவமளிக்கவில்லை இது மிகவும் கவலையான விடயமாகும். 

சம்மாந்துறை கல்வி வலயத்தில் சுமார் 27000மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் 13000மாணவிகள் உள்ளர். சம்மாந்துறை பரதேசத்தில் பெண் பிள்ளைகள் கற்கக்கூடிய ஒரு சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.

சம்மாந்துறைப் பிரதேச ஏழை மக்களின் பெண் பிள்ளைகள் தூர இடங்களுக்குச் சென்று கல்வி கற்கும் சிரமத்தினை போக்குதற்கும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கும், அக்கல்லூரியில் காணப்படும் வளப்பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்வதற்கு நமக்கு கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் பெற்றுக்கொள்வதற்கு கிழக்கு முதலமைச்சர் தடையாக இருப்பது வேடிக்கையாகவுள்ளது.

குறிப்பாக அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியானது விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியில் உள்ள மாணவிகள் வெளியிடங்களுக்குச் சென்று கற்கக்கூடிய பொருளாதார வசதிகள், பாதுகாப்புக்கள் என்பன இல்லாததொரு நிலை காணப்படுகிறது.

விசேடமாக அப்பாடசாலையில் மிகவும் திறமையுள்ள மாணவிகள் உள்ளனர் என்பதனை அம்மாணவர்களின் பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றது.. குறிப்பாக க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற அநேகமான மாணவிகள் அங்குள்ளனர்.

 ஆகவே இவர்களுக்கு தரமான கல்வியினை வழங்குவதனூடாக அவர்களையும் எமது பிரதேசத்தில் நற்பிரஜைகளாக உருவாக்க முடியும்.

கல்வி என்பது அரசியல் வேறுபாடுகளு்கப்பால் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயமாகும். மனிதனாக பிறந்த யாரும் இந்தவிடயத்திற்கு தடையாக இருக்க முடியாது. என்னால் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி அரசியல் நோக்குத்துடன் பார்க்கப்படுகிறது.

 இந்தவிடயத்தில் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள உலமாக்கள், நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ்சூறா மற்றும் புத்திஜீவிகள், கல்விமான்கள், கவனம் செலுத்த வேண்டும்.

நமது சமூகத்திற்கான கட்சி எனும் போர்வையில் நமது மக்கள் வழங்கிய ஆணையைப் பெற்ற கட்சியின் முதலமைச்சர் ஒருவர் முஸ்லிம் மாணவிகளின் கல்வி, பாதுகாப்பிற்கு தடையாக இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog