Breaking

Wednesday

அமைச்சரவை முடிவை விரைந்து அமுல்படுத்தும்வரை நம்பிக்கையில்லை!


காரைதீவு  நிருபர் சகா

139வது நாளில்அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிப்பு!

அமைச்சரவை முடிவின்படி வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இப்படி எத்தனையோ முடிவுகள் அமுலுக்கு வராமலுள்ளன. எனவே அம்முடிவை விரைந்து அமுல்படுத்தும்வரை எமக்கு நம்பிக்கையில்லை.

இவ்வாறு அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் (தமிழ்)சங்கத்தலைவர் எஸ்.திலீபன் தெரிவித்தார்.
சத்தியாக்கிரகப்போராட்டம் நேற்று(17)திங்கட்;கிழமை காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே 139வது நாளாகத் தொடர்கிறது.

நேற்றைய தினம் அவர்களது கூடாரத்திற்குள் பட்டதாரிபெண்மணிகள் சிலர் இருந்தனர். எனினனும் வெப்பம் கருதி ஒரு சிலர் அருகிலுள்ள மாமரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
இது தொடர்பில் பட்டதாரிகள் சங்கத்தலைவர் திலீபனிடம் கேட்டபோது.

பேராட்டங்கள் வீண்போவதில்லை.இன்று நான்குமாதங்கள் கழிந்தும் எந்ததீர்வையும் காணவில்லை.அதற்காக நாம் மனம்தளரவில்லை.

நல்லாட்சி நிலவுகின்ற இந்தநாட்டின் எமது போராட்டத்திற்கு ஒரு ஒளிக்கீற்றாக அமைச்சரவை முடிவொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக நம்பவேண்டுமானால் அதனை விரைந்து அமுலுக்குக்கொண்டுவர சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

எங்களை அரசியலுக்காக ஏமாற்றநினைத்தால் விபரீதமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டிவரும்.உங்களது அரசியல்சித்துக்களுக்காக எமது வாழ்க்கையை பலியாக்காதீர்கள். எனவே விரைந்து தீர்வைத்தருமாறு சகலரையும் வேண்டுகின்றோம்.

பட்டதாரிகளை ஏமாற்றினால் தேர்தலில் என்னநடக்கும் என்பதை இப்போதே தெரிவிக்கின்றோம்.உங்களது அரசியல் சாணக்கியம் தந்திரம் உங்களோடு இருநதுகொள்ளட்டும்.நாம் பொறுமைகாப்பது படித்தவர் என்பதற்காக. எம்மைச்சீண்டினால் எமது போராட்ட வியூகம் மாறும்.

பெற்றோர்களுக்கு 150ருபா பெறுமதியான அல்சர் மருந்துகூட வாங்கிக்கொடுக்கமுடியாத துர்ப்பாக்கியநிலையில் அவமானத்தோடு வறுமையில் வாடுகின்றோம்.
கிழக்கு கல்வி பணிப்பாளரின் செய்தி!


இதேவேளை கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திரு.நிசாம் ஒலுவிலில் உரையாற்றியதாக ஒரு செய்தியைப்பார்த்தோம்.
ஆகஸ்ட்டுக்கு முன்  கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச தொழில் குறிப்பாக ஆசிரியர் தொழில் வழங்கவிருப்பதாக கூறியுள்ளார்.

நேற்றுமுன்தனிம் எமது பட்டதாரிகள் அணியொன்று கிழக்கு கல்வியமைச்சரைச்சந்தித்துள்ளனர். அவரும் ஓரிரு வாரங்களுள் நல்லமுடிவை எதிர்பார்க்கலாம் என்ற அடிப்படையில் கூறியுள்ளார். புதிய ஆளுநர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் 257பேருக்கு வழங்கினார்கள்.அது பழையது.இன்னும் கணிதவிஞ்ஞான பட்டதாரிகளுக்கு 440பேருக்கு வழங்கவிருக்கின்றனர்.அதுவும் பழையது. ஆக போராட்டத்திலீடுபட்டுவருவோர் என்ற ரீதியில் 1000பேருக்கு விண்ணப்பம் எதிர்பார்க்கலாம். ஆனால் அதனை நாம் ஏற்கத்தயாரில்லை.

எம்மனைவருக்கும் தொழில் கிடைக்கும் பட்சத்தில்தான் நாம் எமது போராட்டத்தை விலக்கிக்கொள்வோம்.அதுவரை போராட்டம் தொடரும்
என்றார்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog