Breaking

Thursday

காத்தான்குடி, ஆரயம்பதி இரு நகரங்களுக்கான எல்லை வீதி காபட் வீதியாக புனரமைக்க நிதிஒதுக்கீடு.......


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி தெற்கு எல்லை வீதி முற்றுமுழுதாக காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 

காத்தான்குடி, ஆரயம்பதி ஆகிய இரு நகரங்களுக்கான எல்லை வீதியாக அமைந்துள்ள இவ்வீதியானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதானமான வீதிகளுள் ஒன்றாகும். 

இவ்வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் இவ்வீதியினைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 

எனவே இவ்வீதியினை புனரமைப்பு செய்து வழங்குவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக தற்போது இவ்வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 

இதற்கென கிழக்கு மாகாண சபையினூடாக சுமார் 85 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு அதற்கான கேள்விப்பத்திரமும் கோரப்பட்டுள்ளதுடன் விரைவில் புனரமைப்பு வேலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்தும் நோக்கில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினுடைய பொறியியலாளர்கள்,  தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மண்முனைபற்று பிரதேசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினருடன் குறித்த வீதிக்கு நேரடியாக விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் புனரமைப்பு பணிகள் தொடர்பான தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாரிக்கொண்டதோடு அப்பிரதேச மக்களை சந்தித்து இவ் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog