Breaking

Saturday

ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் சவூதி இளவரசர் இலங்கை விஜயம்...


(அஷ்ரப் ஏ சமத்)

சவுதி அரேபியாவின் இளவரசா் தற்போதைய இளவரசரரின் சகோதரரும் முன்னணி முதலீட்டு வா்த்தகருமான இளவரசா் பஹ்த் பின் முக்ரின்ஸின் அப்துல் ்அசீஸ்  மற்றும்  துாதுக்குழுவினரும் இன்று (21) பி.பகல் சவுதி விமான நிலையம்  கொழும்பை வந்தடைந்தனா்.  

இவா்களை இராஜாங்க அமைச்சா்  எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  விமானநிலையத்தில் வைத்து வரவேற்றாா்.  சகல ஏற்பாடுகள் சந்திப்புக்களை இராஜாங்க அமைச்சா் மேற்கொண்டுள்ளாா்.    அத்துடன்  அஷ் செய்யத் காதா் மசுர் மௌலாநாவும் இவ் நிகழ்வில்  கலந்து கொண்டாா்.  

இவ் சவுதி துாதுக் குழுவினா்  இலங்கையில்  4 நாற்கள் தங்கியிருப்பாா். அத்துடன் ஜனாதிதபி மைத்திரிபால சிறிசேனா, பிரதம  மந்திரி ரணில் விக்கிரமசிங்க முதலீட்டு அமைச்சா் மலிக் சமரவிக்கிரமசிங்க,  வெளிநாட்டு அமைசசா் ரவி கருநாயக்காவையும் சந்திப்பாா்.  

அத்துடன் இலங்கை வா்த்தக முதலீடுகள் பற்றியும் கலந்துரையாடுவாா். ஞாயிற்றுக்கிழமை காத்தாண்குடிக்கும் செல்ல உள்ளாா். 



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog