Breaking

Wednesday

சம்மாந்துறை, மல்வத்தையை அண்டிய பிரதேசத்தில் பஸ் விபத்து...!


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இன்று (26) அதிகாலை குடைசாய்ந்ததில், அதில் பயணித்த சுமார் 35 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி, மல்வத்தைப் பிரதான வீதியால் பயணித்த இந்த பஸ் குடைசாய்ந்து வயல்வெளிக்குள் விழுந்துள்ளது.

மேற்படி பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-minnall-
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog