Breaking

Saturday

இ.கி.மிசன் உலகதலைவர் சுவாமி கௌதமானந்தாஜீக்கு காரைதீவில் மகத்தான வரவேற்பு!2000பக்தர்களுக்கு ஆசீர்வாதம்!


(காரைதீவு  நிருபர் சகா)

அகில உலக இராமகிருஸ்ணமிசன் மற்றும் மடங்களின் துணைத்தலைவரும் தமிழ்நாடு சென்னைக்கிளையின் தலைவருமான அதிபூஜ்ய சுவாமி கௌதமானந்த ஜீக்கு நேற்று(27) திகதி வியாழக்கிழமை காரைதீவில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பிற்பகல் 4.30மணியளவில் வருகைதந்த சுவாமியுடன்  இலங்கைக்கான இராமகிருஸ்மிசன் உபதலைவர் சுவாமி சர்வருபானந்தா மஹராஜ் மட்டுமாநில தலைவர் சுவாமி பிரபுபிரேமானந்தா ஜீ சுவாமி சாஸ்வதானந்தா ஜீ உள்ளிட்ட பல சுவாமிகள் வருகைதந்தனர்.

அவருக்கு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில்  பூரணகும்பம் வைத்து பெரு வரவேற்பளிக்கப்பட்டு ஆலயத்தில் விசேடபூஜை இடம்பெற்றது. சுவாமிகளுக்கு காளாஞ்சியும் வழங்கப்பட்டது.

ஆலயத்திலிருந்து மத்தியவீதியுடாக நாதஸ்வர மேளதாளம் மற்றும் கல்முனை இ.கி.மிசன் மகாவித்தியாலய மாணவரின் தமிழின்னிய அணியினரின் வாத்தியம் முழங்க பாடசாலை மாணவர்களின் இந்துசமய பண்பாடுகளை பிரதிபலிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் சகிதம் நன்கு வடிவமைக்கப்பட்ட சதுரவடிவ குடையினூடாக அழைத்துச்செல்லப்பட்டார்.

வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று வழிபட்டனர்.மக்கள் புரணகும்பம் வைத்து பூமாலை அயிவித்து சுவாமியை வழிப்பட்டனர். அத்தருணம் கடும்காற்றுடன் மழைபொழியும் வகையில் வானம் இருண்டு குளிர்வீசியது.

நேராக ஊர்வலம் காரைதீவு கொம்புச்சந்தியை அடைந்து அங்கிருந்து காரைதீவு இ.கி.மி.சாரதா சிறுமியரில்லம் வரை பாரிய கலாசார பாரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது வழிநெடுகிலும் மக்கள் பூரணகும்பம் வைத்து தேங்காய உடைத்து வழிபட்டனர். மாலைகள் சரமாரியாக அணிவிக்கப்பட்டபோதிலும் சுவாமி போட்டுமறுகணமே அவற்றை உரியவர்களிடம் வழங்கிவைத்தார்.

சாரதாஇல்லத்தை அடைந்ததும் அங்கு விசேடவரவேற்பு அளிக்கப்பட்டது.இல்ல மாணவிகள் ஒவ்வொருவராலும் அழகான பூமாலைகள் சுவாமிக்கு சூட்டப்பட்டன.பின்பு சுவாமிக்கு செங்கம்பளவரவேற்பளிக்கப்பட்டது.

இல்லத்துள் சென்ற   சுவாமிகள் குருதேவரை வழிபட்டபிற்பாடு வேதபாராயணம் ஓதப்பட்டது. உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சுவாமியின் விஜயம் தொடர்பான விளக்கவுரையையும் அதிபர் எஸ்.மணிமாறன் வரவேற்புரையையும் நகிழ்த்தினர்.

சற்றுநேரத்தின்பின்னர் இல்லமுன்றலில் விசேட ஆசனத்தில் வந்தமர்ந்தார்.. மக்கள் இல்ல வளாகத்தை நிறைத்திருந்தனர்.எங்கு பார்த்தாலும் ஒரே ஆவல் மக்களிடம் தென்பட்டது. சுவாமி சர்வருபானந்தாஜீ ஆரம்பத்தில் சிறுஉரைவழங்கி சுவாமிக்கு வழிவிட்டார். சுவாமி கௌதமானந்தா ஜீ சுமார் 28நிமிடங்கள் அருளுiராயற்றினார்.

உள்ளுர் வெளியூர்களிலிருந்து கலந்துகொண்டஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக இருந்து அருளுரையை செவிமடுத்தனர்.
அருளுரையின் பின்னர் மக்கள் பாதநமஸ்காரம் செய்து சுவாமியை வழிபட்டதும் அவர் ஒவ்வொருவருக்கும் லட்டு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

 குழந்தைகள் பாடசாலை மாணவர்கள் பெரியோர்கள் மிசன் அபிமானிகள் சிவானந்தா பழைய மாணவர்கள்  என சுமார் 2000 பேர்  முண்டியடித்துக்கொண்டு ஆசிர்வாதம் பெற முற்பட்டனர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் சுமார் 2000பக்தர்களுக்கு அவர் ஆசீர்வாதம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இரவு 8மணிவரை தொடர்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog