Breaking

Tuesday

கார்க்கோட்ஸ் பார்மசி நிறுவனத்தின் களஞ்சியசாலையில் தீ....


சாய்ந்தமருது நகரில் அமைந்துள்ள கார்க்கோட்ஸ் பார்மசி நிறுவனத்தின் களஞ்சியசாலையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அக்களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மூடப்பட்டிருந்த இக்களஞ்சியசாலையினுள் நேற்று இரவு  தீ பரவல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினரும் கல்முனை பொலிசாரும் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்த போதிலும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு பின்னரே  தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன்காரணமாக  அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக ஏனைய வர்த்தக நிலையங்கள் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டது  அதேவேளை குறித்த  களஞ்சியசாலையில் இருந்த அனைத்து  மருந்துகளும் தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தில்லைநாயகம்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog