Breaking

Wednesday

கொடியேற்றத்திற்காக கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்கும் சரமாரியாக பஸ்சேவைகள்!


காரைதீவு  நிருபர் சகா

கதிர்காமம் மற்றும் உகந்தமலைமுருகனாலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து சரமாரியான பஸ்சேவைகள் இடம்பெற்றன.

அடிக்கடி இடம்பெற்றுவரும் பஸ்சேவைகளை கல்முனை டிப்போ முகாமையாளர் ஜௌபர் அதிகாலைமுதல் களத்திலிருந்து கண்காணித்துவருகின்றார்.

உகந்தைக்கு ஒருவழிப்பயணக்கட்டணமாக 220ருபாவும் கதிர்காமத்திற்கு 360ருபாவும் அறவிடப்படுகின்றது. பஸ்சொன்றுக்கு 40ஆசனங்களுக்கு முற்கூட்டியே பதிவுசெய்யும் நடைமுறையும் உள்ளது.

நேற்றும் நேற்றுமுன்தினமும் கொடியேற்றத்திற்காக அடியார்கள் நலன்கருதி 30க்கும் மேற்பட்ட பஸ்சேவைகளை தாம் நடாத்தியதாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
நாம் தினமும் காலையில் 6.30க்கு கதிர்காமத்திற்கும் உகந்தைக்கும் பஸ்சேவைகளை தொடர்ந்துநடாத்தவுள்ளோம்.அடியார்கள் போதுமானளவு சேர்ந்தால் மேலதிக பஸ்சேவைகளை உடன் நடாத்தவும் தயாராகவிருக்கின்றோம்.

அடியார்கள் முற்கூட்டியே பதிவுசெய்யவிரும்பினால் கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் ஆசனங்களுக்காக பதிவுசெய்துகொள்ளமுடியும்.

இதைவிட 40பேர் பக்தர்கள் சேர்ந்து தனியாக பஸ்களை ஒதுக்கிக்கொண்டு எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தீர்த்தோற்சவநேரத்தில் மிக கூடுதலான பஸ்சேவைகளை நடாத்த இப்போதே திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தனியார் பஸ்களும் அடிக்கடி உகந்தை மற்றும் கதிர்காமத்திற்கான சேவைகளை நடாத்திவருகின்றது.
இதனால் காலையில் கல்மனை பஸ்தரிப்புநிலையம் களைகட்டிவருகின்றது.

எதுஎப்படியிருப்பினும் கல்முனை பஸ்நிலையத்திலுள்ள அறிவித்தல் பலகையில் இன்னும் 'கல்முணை' என்றே உள்ளது. தமிழ்பேசுவோர் நூறுவீதமுள்ள கல்முனையில் இதனை சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவில்லையா? என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog