Breaking

Tuesday

கிழக்கின் ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்....!


பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்-

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகா ண ஆளுநராக கடந்த 04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கமைய இன்று (11.7.2017) காலை தனது கடமைகளை திருகோணமலை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண வீதிய அபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்டவர்களுடன் ஆளுனரின் செயலாளர், திணைக்கள தலைவர்கள், செயலாளர் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


“கிழக்கு முழுவதும் தனது சேவைகளை மூவின மக்களுக்கும் சமமான சேவையாக மிளிர வேண்டும் எனவும் தாங்களின் சேவைகளை நாம் மிகவும் எதிர்பார்தவர்களாக தாங்களுக்கு வாழ்த்துக்கூறிய இன்முகத்துடன் கிழக்கு மாகாணத்திற்கு அழைக்கின்றோம் எனவும், முன்னைய ஆளுநரின் சேவையை நாம் பாராட்டி வாழ்த்துகின்றோம்” எனவும் கிழக்கு மாகாண சுகாதசர அமைச்சர் ஏ.எக். முஹமம்ட் நஸீர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.-- 




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog