Breaking

Wednesday

தியாகம் செய்தால் மட்டுமே சாதனை படைக்கலாம்! உயர்தரமாணவர் விடுகைவிழாவில் கல்விப்பணிப்பாளர் நஜீம்!


(காரைதீவு  நிருபர் சகா)

இன்னும் இருக்கின்ற 20நாட்களில் முயற்சியுடன் பயிற்சி செய்து தியாகம்

செய்து படியுங்கள். வெற்றி நிச்சயம். குறிப்பாக தொலைக்காட்சி மற்றும்

அலைபேசிகளை தியாகம் செய்தாலே போதுமானது. தியாகம் செய்தால் மட்டுமே சாதனை
படைக்கமுடியும்.

இவ்வாறு நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய வருடாந்த உயர்தர மாணவர்
விடுகை விழாவில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றிய சம்மாந்துறை
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.

இவ்விடுகைவிழா நேற்று(18) செவ்வாய்க்கிழமை அதிபர் நா.பிரபாகர் தலைமையில்

சிறப்பாக நடைபெற்றது.கௌரவஅதிதியாக உதவிக்கல்விப்பணிப்பாளரும் இப் பாடசாலை
மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்துசிறப்பித்தார்.

முன்னதாக இரு கல்விப்பணிப்பாளர்களுக்கும் வாழ்த்துப்பா பாடி அதிபர்

நா.பிரபாகர் மற்றும் பிரதிஅதிபர் திருமதி.நிலந்தினிரவிச்சந்திரன் ஆகியோர்

கையளித்தனர். கூடவே மாலைசூடி கௌரவிக்கப்பட்டார்கள்.
உயர்தரமாணவர்களின் நவீனம் சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டது. பிரதிஅதிபர்
திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனால் நயவுரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து பிரதமஅதிதி நஜீம் உரையாற்றுகையில்:
சம்மாந்துறை வலயத்தின் குறிப்பாக நாவிதன்வெளிப்பிரதேசத்தின்
கல்விஅடைவுகளிலும் இணைப்பாடவிதான அடைவுகளிலும் கணிசமானளவு பங்கை

இப்பாடசாலை செலுத்திவருவது கண்டு மகிழ்வடைகின்றேன்.
அதற்காக எனது 3வருட காலத்தில் சுமார் 2கோடிக்கும் அதிகமான தொகையை இங்கு

பாடசாலை அபிவிருத்திக்காக  வழங்கியிருக்கின்றேன். இங்கு
ஒருமேடையுடன்கூடிய மண்டபமொன்றை அமைக்கவேண்டிய தேவைப்பாடுஉள்ளது.அதற்காக
என்னாலியன்ற முயற்சியைமேற்கொள்வேன்.

80வருடகால வரலாற்றைக்கொண்ட இப்பாடசாலையில் இம்முறை
பரீட்சைக்குத்தோற்றவிருக்கும் 23மாணவர்களும் சிறப்பான சித்திகளைப்பெற்று

பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என வாழ்த்துகிறேன்.கடந்த 10வருட காலத்தில்

66மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியபெருமை இப்பாடசாலைக்கு உண்டு.

கடந்தவருடம் க.பொ.த.சா.த பரீட்சையிலிருந்து உயர்தரத்திற்கு மாணவர்களை

அனுப்பிய சதவிகிதம் விஞ்சிவிட்டது. எமதுவலய சராசரி 60வீதம்.ஆனால்

இப்பாடசாலை ஒருபடிமேலேசென்று 90வீதமாக சாதனைபடைத்திருந்தது.

ஆனால் இன்னும் இப்பிரதேசத்திலிருந்து பிரபல பாடசாலை என்றுகூறி

கல்முனைக்குச்செல்கின்றவர்களின் வீதம் உள்ளது. அதனை இப்பாடசாலைதான்
முறியடிக்கவேண்டும்.

அதற்கு இங்கு பயிலும் மாணவர்கள்தான் பதிலிறுக்கவேண்டும். நீங்கள்

சாதனைமிக்க பெறுபேறுகளைள எடுத்துக்காட்டுகின்றபோது இங்கிருந்து யாரும்
கல்முனைக்குப் போகமாட்டார்கள்.

வாழக்கையில் திருப்புமுனையாக அமைவது உயர்தர பரீட்சைதான்.அதில்
சித்தியடைந்ர் பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வில் வசந்தம்தான்.அது
இன்பகரமான காலம்.அதனை நீங்கள் நன்றாக சுதந்திரமாக அனுபவிக்கலாம்.

எனவே அடுத்துவரும் நாட்களை மிகவும் கவனமாக முயற்சியுடன்பயிற்சிசெய்து

படித்தால் நிச்சயம் முன்னேறலாம். வாழ்த்துக்கள். என்றார்.
23மாணவர்களுக்கும் ஞாபகச்சின்னங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன.

நன்றியுரையை ஆசிரியை திருமதி எஸ்.ருபன் நிகழ்த்தினார்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog