Breaking

Wednesday

மரிக்கார் அவர்களினால் கௌரவ பிரதமர் அவர்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி இஸ்லாமிய மார்க்க நிகழ்வுகள்...


(.அஷ்ரப் ஏ சமத்)

எஸ்எம்.மரிக்கார் அவர்களினால் கௌரவ பிரதமர் அவர்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய மார்க்க நிகழ்வுகள்

1977ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டில் ஏற்படுத்திய பாரிய பொருளாதார, சமூக மற்றும் கலாசார மாற்றத்தின் 40ம் ஆண்டு நிறைவையும்,பிரதமர் ரணில் விக்கிமசிங்ஹா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட 40 வருட பூர்த்தியையும் முன்னிட்டுஅவருக்கும், எம் நாட்டிற்கும் நலன் வேண்டி நடைபெற்ற பிரதான இஸ்லாமிய சமய ஆசீர்வாத நிகழ்வு 

2017 ஜூலை 25ம் திகதி கொலொன்னாவைஜூம்மா மஸ்ஜித் மண்டபத்தில் கொலொன்னாவை ஐக்கிய தேசிய கட்சி பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.ஏற்பாட்டின் கீழ் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

 இந்நிகழ்வில் நடைபெற்ற ஆசீர்வாத நிகழ்வு கொலொன்னாவை ஜூம்மா மஸ்ஜிதின் பிரதான மௌலவிகளான சிராஜ்டீன் மற்றும் இஸ்ஸடீன் ஆகியோரினால்; நடாத்தப்பட்டதோடு, பள்ளிவாசல் நிர்வாக சபையினர் மற்றும் கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் ஹனீப்ஹாஜி அவர்கள் உட்பட ஏனைய இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில்; கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog