Breaking

Sunday

இன்று கதிர்காமத்தில் அன்னதானம் ஆரம்பம் : நாளை கொடியேற்றம்...


 (காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தனாலய ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய அன்னதான நிகழ்வுகள் இன்று(23) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிர்காமத்தில் ஆரம்பமாகின்றது.நாளை 24ஆம் திகதி கொடியேற்றம் இடம்பறெவிருக்கிறது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தனாலயக் கொடியேற்றம் நாளை  24ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் நடைபெறுமென கதிர்காம பஸ்நாயக்க நிலமே வி.ரி.குமாரகே தெரிவித்தார். 

இக்கொடியேற்றத்திருவிழா கதிர்காமம் பால்குடிபாவா பள்ளிவாசலில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தீர்த்;தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அன்னதானம் இன்று  ஆரம்பம்!

இதேவேளை கதிர்காமத்தில் அன்னதானம் இன்று 23இல் ஆரம்பமாகின்றது. இந்துயாத்திரீகர்கள் விடுதியிலும் அண்மையில் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்ட தெய்வானைஅம்மன்ஆலய அன்னதான மண்டபத்திலும்  இன்று  அன்னதானம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

கதிர்காமம் இந்து கலாசார திணைக்கள  யாத்திரீகர்கள் விடுதியில் வருடாந்தம் தொடர்ந்து அன்னதானத்தை சிறப்பாக நடாத்திவரும் சிவபூமி தொண்டர்சபையினர் இம்முறையும் அன்னதானத்தை கொடியேற்றம் தொடக்கம் தீர்த்தோற்சவம் வரை நடாத்தவுள்ளனர்.
.
அன்னதானசபையின் தலைமைப்பொறுப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தகவல்தருகையில்:

இம்முறை அடியார்களுக்கான அன்னதானத்தை நாம் இன்று 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கின்றோம். பாதயாத்திரீகர்கள் வெளிமாவட்ட பக்தர்கள் அனைவருக்கும் வாழையிலையில் விருந்தளிப்பதற்காக நாம் 23ஆம் திகதியே எமது பணியை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.

அதற்கான பணிகளை இப்போதே ஆரம்பித்திருக்கின்றோம்.
மரக்கறிகளின்விலைகள் சற்று அதிகமாகவிருந்தமை மற்றும் வெள்ளம்வரட்சி காரணமாக எமக்கான உதவிகள் சற்று குறைவடைந்திருந்தாலும் வழமைபோல அன்னதானம் இடம்பெறுமென திரு.ஞானசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

பாதயாத்திரைக்குழுவினர் இன்று கதிர்காமத்தில்!

யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த யூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினரும் வேறு 2000பேரும் இன்று(23) ஞாயிற்றுக்கிழமை கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.

பாதயாத்திரைக்குழுவினர் இன்று(23) ஞாயிற்றுக்கிழமை கதிர்காமத்தை வந்தடையவுள்ளனரென வீரையடியிலிருந்து நேற்று வேல்சாமி தெரிவித்தார். 

இம்முறை 10தினங்களுக்கு முன்னரே காட்டுப்பாதை திறக்கப்பட்டமை பாதயாத்திரீகர்களுக்கு பலத்த அசௌகரியத்தைக்கொடுத்துள்ளது.இனிமேல் மொனராகலை அரச அதிபர் மற்றும் பஸ்நாயக்க நிலமேயினர் கொடியேற்றத்திகதியினை 3மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். அத்துடன் கொடியேற்றத்திற்கு 7நாட்களுக்கு முன்னதாக காட்டுப்பாதை திறக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Attachments area
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog