Breaking

Wednesday

தடைகளை தகர்த்தெறிந்து சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தரமுயர்த்துவேன்......


ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேதான் சம்மாந்துறைப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.

சம்மாந்துறை தென்னம்பிள்ளை மற்றும் மலையடிக் கிராமங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களிலேதான் எமது பிராந்தியங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்திலே 3600 வீடுகள் சம்மாந்துறைப் பிரதேசத்தில் கட்டப்பட்டன. அந்த வீடுகளில் மக்கள் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கன்றனர்.

அதன் பின்னர் சம்மாந்துறை தொகுதியில் எந்தவிதமான பாரிய அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இன்று நாம் சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள பாதைகளை சீரமைத்து அபிவிருத்தி செய்து வருகின்றோம். சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினூடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்ற போது இன்று பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இதற்கு எமது உள்ளுர் அரசியல் தலைவர்கள் தடையாகவுள்ளனர். இவ்வாறான குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள கல்விமான்கள், உலமாக்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அவதானம் செலுத்த வேண்டும். கல்வி அபிவிருத்தி என்பது பொதுவானதொரு விடயமாகும். இதனை யாரும் ஒருபோதும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது.

ஒரு பிரதேசத்தினுடைய பொதுவான அபிவிருத்திகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே அல்-மர்ஜான் கல்லூரி அபிவிருத்திற்கு ஏற்பட்டுள்ள அரசியல் தடைகளை தகர்த்தெறிந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலே அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிப்பேன்.

எமது நாட்டினுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனைக்கமைவாக கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தினூடாக கல்முனை பிரதேசம் பாரிய அபிவிருத்திகளை கானவுள்ளது. இதில் சம்மாந்துறைப் பிரதேசமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 

இதனை சிலர் தங்களுடைய அபிவிருத்திகள் போன்று சித்தரிக்க முனைகின்றனர். இது குறித்து மக்கள் விழ்ப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog