Breaking

Thursday

100நாட்களைத்தொட்ட அம்பாறைமாவட்ட வேலையற்றபட்டதாரிகளின் போராட்டம்!


By-காரைதீவு  நிருபர் சகா

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமானது நேற்று(6) செவ்வாய்க்கிழமை 100வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றது.

காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே முகாமிட்டு கடந்த 100நாட்களாக போராட்டத்திலீடுபட்டுவரும் பட்டதாரிகள் கிஞ்சித்தும் மனம்தளராமல் உள்ளதைக்காணமுடிந்தது.

அதிகமான நோன்பாளிகளும் காணப்பட்டனர்.

கிழக்கு மாகாணமுதலமைச்சர் 1700பேருக்கு ஆசிரியர் தொழில்கொடுக்க நேர்முகப்பரீட்சை நடாத்திவருகிறார். அதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.

இன்னுமின்னும் 2012இலும் அதனையடுத்துவரும் பட்டதாரிகளும் குறிப்பாக கலைவர்hத்தக நுண்கலைப்பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்படவுள்ளனர்.

கிழக்குமாகாண ஆளுநரும் இதுவிடயத்தில் பாராமுகமாக இருப்பது எமக்குவேதனையளிக்கின்றது.

பாராளுமன்றகுழுத்தலைவராக இருந்து இங்குவந்த பேராசிரியர் மாரசிங்க எம்.பி. எமக்களித்த 2மாதகால வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. நாம் யாரை நம்புவது?

எத்தனை நூறுநாட்கள் சென்றாலும் நாம் எமது இறுதிஇலக்கை அடையும்வரை பின்வாங்கப்போவதில்லை.என்றனர்.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog