Breaking

Friday

மாகாண பிரமுகர்கள் கலந்துகொண்ட மாபெரும் இப்தார் நிகழ்வு !


By-காரைதீவு நிருபர் சகா

கிழக்கு மாகாண முக்கிய கல்வி அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று மாலை சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த  வருடாந்த இப்தார் நிகழ்வு  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை வலயக்கல்வி அலுவலக வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 

இதன்போது கிறாஅத் ஆசிரியஆலோசகர் ஹஜ்மொகமட் நிகழ்த்த விசேட மார்க்க சொற்பொழிவையும் துஆப் பிரார்த்தனையும் மௌலவி யூ.எல்.எம்.அமீன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர் ரீ.கலையரசன் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம்இ பீடாதிபதி கலாநிதி தாரிக் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கல்குடாவலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி முன்னாள் கல்வி பணிப்பாளர்கள் திணைக்கள தலைவர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள்  ஆசிரிய ஆலோசகர்கள் உலமாக்கள் வலயக்  கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் பிரதேச அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நன்றியுரையை பிரதிக்கல்விப்பணிபாளர் அகமட் கியாஸ் நிகழ்த்த நிகழ்ச்சிகளை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog