Breaking

Tuesday

அடிகாற்றில் தூக்கிவீசப்பட்ட பட்டதாரிகளின் கொட்டில்..!


By-காரைதீவு  நிருபர் சகா*

*காரைதீவு விபுலானந்தசதுக்கமருகே தகரக்கொட்டில் அமைத்து முகாமிட்டு
அரசதொழில்கேட்டு போராடிவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கொட்டில்
கடந்த வெள்ளியன்று( 16) மாலை வீசிய பயங்கர அடிகாற்றில் சிக்குண்டு
தூக்கிவீசப்பட்டது.*

*இதனால் கொட்டிலுக்கு பாரிய சேதமேற்பட்டது. அன்று வீசிய அடிகாற்றுடன் பொழிந்த
பெருமழையும் கொட்டிலை பெரிதும் சேதபடுத்தின. *


*எனினும் பட்டதாரிகள் ஒன்றுசேர்ந்து தற்காலிகமாக விரிப்பொன்றை(ரென்ற்)
ஏற்படுத்தி தமது போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். *


*சனிக்கிழமை 111வது நாள் கொட்டிலை தற்காலிகமாக அமைத்து போராட்டத்திலீடுபட்டனமை
குறிப்பிடத்தக்கது.*

*அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமானது நேற்று(18)
ஞாயிற்றுக்கிழமை 112வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றது..*

*புனித ரமழான் நோன்பின் 23வது நாள் நேற்றாகும்.இருந்தும் அதிகமான
நோன்பாளிகளும் காணப்பட்டனர். *

*தற்காலிக கொட்டில் அமைத்து அங்கிருந்து*
*அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:*

*அடிகாற்றினால் எமது இருப்பிடம் சேதமாக்கப்பட்டது ஒன்றும் எம்மைப்பாதிக்காது.*

*அடிகாற்றென்ன சுனாமி வந்தாலும் நாம் அசையமாட்டோம். எமது இலட்சியம்
நிறைவேறும்வரை எமது போராட்டம் தொடரும்.*

*மத்திய அரசும் மாகாணஅரசும் எங்களைத் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன.
எத்தனைநாட்களுக்குத்தான் ஏமாற்றுவார்கள் என்பதை பார்க்கத்தான் இருக்கின்றோம்.*

*இன்று வட மாகாணசபையின் நிலையைப்பாருங்கள். எம்மைத் தொடர்ந்து ஏமாற்றினால்
கிழக்கு மாகாணசபையொன்றும் பொருட்டல்ல.நாமே மாற்றத்திற்கு காரணமாக அமைவோம்.*

*எந்தவொரு தீர்க்கமான முடிவும் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பமானதே வரலாறு.
அதுபோல எமது போராட்டத்தின் திருப்புமுனையும் அம்பாறை மாவட்டத்திலிருந்தே
நடக்கும்.*
*பொறுத்திருந்து பாருங்கள். என்றனர்.*




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog