Breaking

Monday

போர்முனையில் பெண்கள்!” இந்திய ராணுவத்தின் புதிய சரித்திரம்.


நாகரிக உலகில் ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் பெண்களும் தங்களின் சாதனைகளை உலகிற்கு நிரூபித்துக்காட்டக்கூடிய வகையில் எண்ணற்ற செயல்களைப் புரிந்து வருகிறார்கள்.எல்லாத் துறைகளிலும் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள். "ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம்; 

ஆணுக்குப் பெண் இங்கே சளைத்தவர்கள் இல்லை" என்ற கூற்றுக்கு ஏற்ப எந்தத் துறையில் வேண்டுமென்றாலும் பெண்களால் சாதித்துக்காட்ட முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராணுவத்தில் பெண்களால் பணிபுரிய முடியாது என்ற நிலை இருந்தது. 

இந்திய ராணுவத்தில் பெண்கள் அதிகாரிகள் நிலைவரை பயிற்சி முடித்து இணைந்தபோதிலும், அவர்களுகென்று குறிப்பிட்ட பணிகளே ராணுவத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பெண்களும், ஆண் ராணுவ வீரர்களைப் போன்றே ராணுவத்தில் போர்க்களத்தில் போர் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்தகவலை இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "இனி பெண்களையும் பபின் ராவத்போர்க்களத்தில் அனுமதிக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பெண்களுக்கு இந்த மாற்றம் ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும். 

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் மட்டுமே ராணுவத்தில் உள்ள பெண்கள் போர்க்களத்தில் பணிபுரிய அனுமதிக்கபட்டு வருகிறார்கள். அந்த நாடுகளில் பெண்களுக்கு பல ஆண்டு காலமாகவே ராணுவத்தில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. 

பெண்களின் உடல் உபாதைகளைக் கருத்தில்கொண்டே, அவர்களுக்கு கடுமையான பணிகள் அளிக்கப்படுவதில்லை. ஆனால், இப்போது பெண்கள் எதற்கும் தயார் என்ற நிலைக்கு வந்துள்ளனர். உடல் உபாதைகளை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. ஆட்டோ ஓட்டுதல் முதற்கொண்டு, விமானங்களை இயக்கும் விமானி வேலைவரை எல்லாத்துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர். 

மருத்துவம், பொறியியல் படிப்புகளை முடித்த பெண்கள், அந்தந்தத் துறைகளில் திறமைகளை வெளிக்காட்டி வந்தார்கள். ஏற்கெனவே ராணுவத்தில் பெண்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது போர்க்களத்தில் போர் புரியவும் அவர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் பெண்களை பணியாற்ற அனுமதித்திருப்பது தொடர்பாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறுகையில், "பெண்களை போர்க்ககளத்தில் அனுமதிக்கும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி விட்டது. முதலில் பெண்களுக்கு ராணுவ போலீஸ் பதவி வழங்கப்படும். 

அந்தப் பணியைக் கற்றபிறகு போர்க்களத்தில் வீராங்கனைகளாகச் செயல்பட அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் போர்க்களத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுசெல்வது போன்ற வேலைகளைச் செய்வதுதான் ராணுவ போலீஸாரின் முக்கியப் பணியாகும். 

அதை முதலில் கற்றுக்கொண்ட பின்னர், பெண்களை  போர்க்களத்தில், எதிரிகளை எதிர்த்துப் போர் புரிய அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று கூறினார்.
by-vikatan

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog