Breaking

Sunday

டெங்கு நோயைக் கண்டறிவதற்கான இரத்த பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறைப்பு...!


டெங்கு நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை கட்டணங்கள் குறைப்பானது நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெங்கு நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை கட்டணங்கள் குறைப்பானது நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

அந்த வகையில் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் ரூபா 750 - 800 கட்டணம் 250/= ரூபா வரையில் குறைப்பதற்கும், முழுஅளவிலான இரத்த பரிசோதனைக்காக (Full blood count) அறவிடப்படும் ரூபா 3000 - 4000 கட்டணம் ரூபா 1000 ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தனியார் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் இதற்கான கட்டணத்தை வரையறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் குறிப்பிடுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog