Breaking

Friday

ரயர்வெடித்து பட்டாரகலொறி விபத்து: காரைதீவில் சம்பவம்!


By-காரைதீவு  நிருபர் சகா

கல்முனையிலிருந்து அம்பாறை நோக்கிப்பயணித்த சிறிய பட்டாரக லொறியொன்றின் ரயர் திடீரென வெடித்ததனால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை சம்பவித்துள்ளது.

ரயர்வெடித்ததையடுத்து பட்டாரக லொறி பாதையைவிட்டுவிலகி வயற்பக்கம் இழுத்துச்சென்றது. எனினும் அங்கிருந்த நீhக்குழாயில் தடைபட்டு நின்றது.வாகனத்தில் சேதம் ஏற்பட்டபோதிலும்  சாரதிக்கோ அருகிலிருந்தவருக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை.

அம்பாறை  இறக்காமத்தைச்சேர்ந்த இச்சிறிய பட்டாரக லொறி யோகட் மொத்தவிற்பனைக்காக கல்முனைக்கு வந்து திரும்பிக்கொண்டிருந்த சமயம் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப்பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog