Breaking

Friday

மியான்மர் விமானம் விபத்து...! கடலில் மிதக்கும் சடலங்கள்.


116 பேருடன் மியான்மரில் மாயமான ராணுவ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
மியான்மரின் Myeik நகரிலிருந்து Yangon நகருக்கு 105 பயணிகள் உட்பட 116 பேருடன் ராணுவ விமானமொன்று புறப்பட்டது.

விமானத்தில் 15 குழந்தைகள், 58 பெரியவர்கள் மற்றும் 35 ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.

நடுவானில் சென்று கொண்டிருந்தபோது டாவி நகரிலிருந்து 20 மைல்கள் தொலைவில், உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் ராணுவ விமானத்துடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

விமானத்தை தேடும் பணி ராணுவ கப்பல் மற்றும் விமானங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று விமானத்தின் உதிரி பாகங்களும், பலியான நபர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக மைக் நகரில் உள்ள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வானிலை தெளிவாக இருந்ததால் தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டாலே காரணம் தெரியவரும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog