Breaking

Thursday

3கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறை மல்கம்பிட்டி அணைக்கட்டிற்கு அருகாமையில் புதிய பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு...


by-Ansar Cassim 
கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய உள்ளுராட்சி, மாகான சபைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் 3கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூரின் அயராத முயற்சியின் பலனாக இப்பிரதேச விவசாயிகளின் மிக நீண்டகாலத் தேவையாக இருந்த சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பட்டம்பிட்டி – மல்கம்பிட்டி அணைக்கட்டிற்கு அருகாமையில் அமையவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி எம்.எஸ்.றிப்னாஸ் தலைமையில் நேற்று (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பாலத்திற்கான அடிக்கல்லினை நட்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் இணைத்தலைவர் யு.எல்.மஹ்ருப் (மதனி), விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பாலமானது 22மீற்றர் நீளமும், 20அடி அகலமும் கொண்டது. வாகனங்கள் செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்வதற்குமான வசதிகள் அயைமவுள்ளது. மல்கம்பிட்டி கிராமத்திலிருந்து நெயினாகாடு கிராமத்திற்கு மிக இலகுவாக விவசாயிகள் இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளலாம். 

மேலும் சல்மடு கண்டம், பெரிய பள்ளிக்கண்டம், கந்தன்வெளி மற்றும் மல்கம்பிட்டி போன்ற வட்டைகளில் விவசாயம் மேற்கொள்ளும் 1000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிதும் நன்மையடைவுள்ளனர்.







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog