Breaking

Monday

எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வு..!35 பேர் அடையாள அணிவகுப்பு.


மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு  மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 35 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயினும்,  பாதிக்கப்பட்ட சிறுமிகள் எவரையும் அடையாளம் காட்டவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு  மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் ஒத்திவைத்தார்.

மேலும், இந்த வன்புணர்வுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர்  நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog