Breaking

Wednesday

ஆண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷங்கள்...!


ஆண்கள் தங்களை கவனிக்காமல் இருப்பதால் உண்டாகும் பிரச்சனைகளும் , பொதுவாக ஆரோக்கிய வாழ்க்கை முறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது

ஆஃபிஸ் டென்ஷன் வீடு, லோன், பிள்ளை படிப்பு, ஸ்கூல் ஃபீஸ், ஈ.எம்.ஐ என மூச்சு முட்ட பாரங்கள் கழுத்தை நெறிக்க, தினமும் ஓடிட்டு இருக்கிற ஆண்கள்ல ஒருத்தரா நீங்க..

உங்களுக்குதான் இந்த கேள்வி...உங்கள் உடலை பரிசோதித்தது கடைசியா எப்போது என நினைவிருக்கிறதா? இன்னும் பண்ணியதே இல்லை என நீங்க சொன்னா நீங்க டேஞ்சர் வளையத்துக்குள சிக்காம இருக்கீங்கன்னு அர்த்தம் இல்லை. உங்க மேல அக்கறையில்லாதவர்னு அர்த்தம்.


நோய் வந்தாதான் மருத்துவரை பாக்கனும் என்பதிலை. வருமுன் காக்கவும் பார்க்கவேண்டும்.

எல்லாமே 40 வயதிற்கு பின் செய்து கொள்ளலாம் என்ற கொள்கையே தவறு. 30 களில் நீங்க செய்யும் விஷயம் 40 களில் பிரச்சனைகளை கொண்டு தரும். உங்களை நீங்க எப்படி நடத்த வேண்டும்னு இங்க 10 விஷயங்களை சொல்லியிருக்கோம். தொடர்ந்து படியுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஃபேமிலி டாக்டர் :
உங்களுக்கென ஃபேமிலி டாக்டர் பாத்து வச்சிருக்கீங்களா? இல்லையென்றால் உடனடியாக நீங்க உங்க வீட்டுக்கு அருகில் நல்ல மருத்துவர் ஒருவரை தேடிப்பிடித்து அவரிடம் ரெகுலராக பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

இதனால் உங்களைப் பற்றிய முழு விபரங்கள் மருத்துவர் தெரிந்து வைத்திருப்பதால் பின்னாளில் உதவக் கூடும். நோய் வரும் முன் உங்களை காக்கவும் முடியும்.

சிறு அறிகுறிகள் :
உடலில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றமோ, வலியோ அலட்சியம் வேண்டாம். மலச்சிக்கல், கண்பார்வை மங்குதல், நெஞ்சுப் பகுதியில் வலி... எதுவாகவும் இருக்கட்டும். உடனே மருத்துவரிடம் போய் ஆலோசனை பெறுவது நல்லது. உடல் உணர்த்தும் அறிகுறிகளைக் கவனிக்காமல் விடுவதே பல பாதிப்புகள் உண்டாகக் ஏற்படுவதற்குக் காரணம்.

சுய வைத்தியம் :
உடலில் பாதிப்பு சிறு பாதிப்பு உண்டானால் உடனே மெடிக்கல் ஷாப் சென்று நீங்களாகவே மாத்திரைகளை வாங்குனால் அது போல் மோசமான செய்கை எதுவுமில்லை. அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ டாக்டரைப் பார்த்து சிகிச்சை பெறுவதே நல்லது. சில சமயம் உயிருக்கே ஆபத்தாக போய் விடும் என்பதால் சுயவைத்தியம் வேண்டாம்.

உடற்பயிற்சி :
ஸ்ட்ரெட்சிங்க், ஏரோபிக்ஸ், தசைகளுக்கான பயிற்சிகள் என அவ்வப்போது உடற்பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்வது நல்லது. இதனால் உடலில் னெகிழ்வுத்த்னமை உண்டாகும். வயதாகும் காலத்தில் உடற்பயிற்சிகளை மாற்றிக்கொள்ளவும், எளிய பயிற்சிகளைச் செய்யவும் உதவும்.

உணவு :
குறைவான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடப் பழகுங்கள். வாழைப்பழம், மீன் உணவுகள், புராக்கோலி, முந்திரி-பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், சிறுதானியங்கள், கீரைகள், சோயா, பழ வகைகள் என ஆண்களின் ஆரோக்கியம் காக்கக்கூடிய பல உணவுகள் இருக்கின்றன. அவற்றைச் சாப்பிடலாம்

தூக்கம் :
உடலின் உள் உறுப்புகள் தங்கள் இயக்கத்தைப் புதுப்பித்துக்கொள்வதும் தூக்கத்தின்போதுதான். 6- 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். சரியான தூக்கமில்லாமல் போவதுதான் உடலில் பாதி பிரச்சனைகளுக்கு காரணம்

மன நலம் :
பதற்றம், அதிக உற்சாகம் அல்லது சோர்வு போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுகிறதா? வெவ்வேறு பிரச்னைகள் காரணமாக மது அருந்துவதும், புகைபிடிப்பதும் அதிகமாகிவிட்டதா? உடனே கவனியுங்கள்.

மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இவை, பின்னாளில் மனஅழுத்தம் போன்ற பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி, மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்துப் பாழ்படுத்திவிடும்.

ப்ரோஸ்டேட் புற்று நோய் :
ஆண்களுக்கு வரும் முக்கிய புற்று நோய்களில் ஒன்று ப்ரோஸ்டேட் புற்று நோய். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களுக்கு ப்ரொஸ்டேட் பிரச்சனைகள் வருவதுண்டு. .

இதைப் பொறுத்த வரை நமக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம். இடுப்புவலி, முதுகுவலி, சிறுநீரகம் கழிப்பதில் பிரச்னை ஆகியவை இருந்தால் அலட்சியம் கூடாது. உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.


பாலியல் ஈர்ப்பு
உங்கள் உடலிலோ அல்லது மனதிலோ பாதிப்பு இருந்தால் அது செக்ஸ் வாழ்க்கையில் பாதிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செக்ஸும் தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே ஈடுபாடு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

வார இறுதி :
உங்கள் எனரிஜியை மீட்டெடுக்கும் விதமாக வார இறுதியை கொண்டாடுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்கள், சமையல், பயணம் என கட்டாயம் செய்வதை வழகப்படுத்திக் கொள்ளுங்கள். பின்வரும் வாரம் முழுவதும் புது தெம்போடு இருப்பீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog