Breaking

Sunday

இலங்கையில் இன முரண்பாடும் அதிகாரப் பரவலாக்கமும் எனும் நுால் வெளியீடு....!


(அஷ்ரப் ஏ சமத்)

அறிஞா் சித்திலெப்பை ஆய்வு மன்றம்  முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் (MULF) ஸ்தாபகச் செயலாளர் நாயகமும், முஸ்லிம்களுக்கான அமைதிச் செயலகத்தின் செயலாளர் நாயகமுமாக கடந்த காலங்களில் செயல்பட்ட நில, கட்டிட அளவையாளர் எம்.ஐ.எம்.மொகிதீன் எழுதிய இலங்கையின் இனத்துவ முரண்பாடும் அதிகாரப் பரவலாக்கமும் நூல் வெளியீடு சித்திலெப்பை ஆய்வுமன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பு தபாலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எம்.ஐ.எம்.மொகிதீன், சிறப்பதிதியாக முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவுத் ஆகியோா்ர் கலந்து சிறப்பித்தனா்  அதேவேளை சிறப்புப்பேச்சாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். சுஹைர்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் சுரேஸ் பிரேமச் சந்திரன், அறிஞா் சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவா் சட்டத்தரணி மவ்சூம் மௌலானா, செயலாளா் பொறியியலாளா் நியாஸ் ஏ சமத் ஆகியோறும் கலந்து    கொண்டு உரை நிகழ்த்தினாா்கள். 


இந் நிகழ்வின் போது எம். ஜ.எம் முகையதீனின் ” இலங்கையில் இன முரண்பாடும் அதிகாரப் பரவலாக்கமும் எனும் நுால் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந் நுாலின் முதற் பிரதியை எம்.ஜ.எம். மொஹிதீனிடமிருந்து கலாநிதி யுசுப் கே. மரிக்காா் பெற்றுக் கொண்டாா்.  எம் ஜ.எம். மொஹிதீன் முஸ்லீம் சமுகத்திற்காக வட கிழக்கு பிரச்சினைகள், அளுத்கம, முஸ்லீம் அதிகாரப் பரவலாக்கல், வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்  எல்.எல். ஆர்.சி றிபோா்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களிடம் 250 க்கும் அதிகமாக தகவல்களை திறட்டி நுால்களை வெளியீட்டுள்ளாா். 

மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரபுடன் சேர்ந்து தென்கிழக்கு பல்கலைக்கழகம், தென்கிழக்கு அலகு போன்ற பல்வேறு அரசியல் அதிகார பேச்சுவாா்த்தையிலும் கலந்து கொண்டு தமது நிலப்பாடுகளை தெரிவித்துள்ளாா்  அவருக்கு ஒரு சமுக விஞ்ஞானியாக இனம் கண்டு அறிஞா் சித்திலெப்பை மன்றம் கொளரவிப்பு நிகழ்வொன்றினையும் நடாத்தியது. 







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog