Breaking

Sunday

மாட்டிறைச்சித் தடையை அடுத்து மீன் இறைச்சிக்கும் தடை வராது என்பது என்ன நிச்சயம்?


பாரதிய ஜனதா அரசாங்கத்தின் மூன்றாண்டு கால ஆட்சியை மக்கள் எடைபோட்டுப் பார்க்கும் தருணத்தில், கால்நடை விற்பனைக்கு நரேந்திர மோதி அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஒரே இரவில் 500. 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் ஆக்கப்பட்டதை போன்ற அடுத்த திடீர் நடவடிக்கையாக, மிருகவதை தடுப்பு சட்டத்தின் (1960) கீழ், கால்நடை விற்பனைக்கு புதிய விதிமுறைகளை பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தில் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பதற்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஒரு விவசாயி மற்றொரு விவசாயிக்கு மட்டுமே கால்நடைகளை விற்கமுடியும். ஒருவர் வாங்கிய கால்நடையை ஆறு மாத காலத்திற்கு பிறகே விற்க முடியும். எந்தவித மத நிகழ்வுகளுக்காகவும் கால்நடைகளை பலியிடக்கூடாது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஒருவர் கால்நடை விற்கக் கூடாது ஆகியவை அந்த சட்டத்தில் கால்நடை வர்த்தகம் தொடர்பான முக்கிய அம்சங்கள் ஆகும்.

அரசு கொண்டுவந்துள்ள இந்த விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்திந்திய இறைச்சி மற்றும் கால்நடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

கேரளாவில் சட்டம் அமலாகாது'
இந்த விதிகளுக்கு, கம்யூனிச கட்சிகள் ஆளும் கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார், விலங்குகள் நலன் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் கேரளாவில் நிறைவேற்றப்படாது என்று தெரிவித்தார்.

''கேரளாவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான இந்துக்களும் அசைவம் உண்கிறார்கள். நாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று மத்திய அரசு எவ்வாறு முடிவு செய்யலாம்?. இந்த முடிவை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். அடுத்த சட்டசபை கூட்டத்தில் இதைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.'' என்றார்.

''மத்திய அரசின் விதிகள் விவசாயிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது அறிவியல்பூர்வமற்ற முடிவு. இந்த சட்டம் மக்களின் நலனைக் கொண்டதாக இல்லை. ஆர் எஸ் எஸ் அமைப்பின் விருப்பத்திற்கான ஒன்று,'' என்றார் அமைச்சர் சுனில் குமார்.

பாஜக கருத்துப்படி அரசு செயல்படுவதில் என்ன தவறு?
சென்னையைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் நந்திதா கிருஷ்ணா, அரசியல் சாசனத்தில் உள்ள விதிப்படி நடப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என்று கேள்வி எழுப்புகிறார்.

''சட்டத்தைக் கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. நாம் சட்டவிதிப்படி நடக்கவேண்டும் என்பது முக்கியம்,'' என்றார்.
பாஜக அரசாங்கம் தனது மதரீதியான கொள்கைகளை மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கை என வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது, ''ஒவ்வொரு அரசாங்கமும் அவர்களது கருத்துக்கு ஏற்றவாறு செய்கிறார்கள். அதுபோல பாஜக அரசாங்கம் அவர்களின் கருத்துப்படி செயல்படுவதில் என்ன தவறு உள்ளது? 

நமது அரசியல் அமைப்பில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. அதை பாஜக அரசாங்கம் செயல்படுத்துகிறது,'' என்றார்.
மேலும், பால் கொடுக்கும் பசுக்களை இறைச்சிக்காக கொல்வது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. வயதான பசுக்களை இறைச்சிக்காக விற்கலாம். அதில் எந்தத் தடையும் இல்லை என்றார்.

'உண்மையான பாதுகாப்பு எது?'
விலங்கு நல ஆர்வலர் நந்திதா கிருஷ்ணாவின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறானதாக காங்கேயம் காளை இன பாதுகாப்பிற்காக இயங்கிவரும் கார்த்திகேய சிவசேனாபதியின் கருத்துக்கள் உள்ளன.

கால்நடை மீது அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு இருந்தால், நாட்டு கால்நடை இனங்களின் வளர்ப்பிற்கு ஊக்குவிக்கும் திட்டங்களை கொண்டுவராமல், தற்போது விவசாயிகளிடம் உள்ள மாடுகளை காவு வாங்குவதுபோல் திட்டங்களை கொண்டுவருவார்களா என்று கேள்வியை முன்வைக்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி.

''நாட்டு இன மாடுகளையும், பண்ணை விவசாயத்தில் இருந்து சாதாரண மக்களை விலக்கி வெளிநாட்டு பெருநிறுவனங்களின் கையில் விவசாய வருமானத்தை கொடுக்கும் திட்டம் எடுத்துள்ள புதிய வடிவம்தான் இந்த புதிய கால்நடை பாதுகாப்பு விதிகள்,'' என்கிறார்.

''விவசாய மக்களின் உணவிலும், வாழ்க்கையிலும் தலையிடும் செயல் இது. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை கொண்டுவர பல வெளிநாட்டு நிறுவனங்கள் கடுமையாக உழைத்தன. அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. 

அதை நிறைவேற்றிக்கொள்ள வேறுவேடத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்,'' என்கிறார்.

விலங்கினங்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் எவ்வாறு விவசாயிகளுக்கு எதிராக முடியும் என்று கேட்டபோது, ''மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூச தடை, மாடுகளுக்கு கயிறு கட்டக்கூடாது என்கிறார்கள். கயிறு கட்டாமல் எப்படி ஒரு விவசாயி மாட்டை ஏரில் பூட்ட முடியும்? 

சாதாரணமாக ஒரு விவசாயி தனக்கு வருமானம் இல்லாதபோது நிலத்தை, ஆடு அல்லது மாடுகளை விற்கவேண்டியிருக்கும். இதை தடுத்தால் விவசாயிகளின் நிலை என்னவாகும்?,'' என்றார்.

பசு அரசியல் பேசாதீர்
புதிய விதிகள் விவசாயிகளை பாதிப்பதாக இல்லை என்றும் கால்நடையை பாதுகாக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தை அரசியல் ஆக்கக்கூடாது என்றும் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

''ஒவ்வொரு நாட்டிலும் அவர்களின் கால்நடைகளை காக்க சட்டம் உள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் மூலம் பசுக்கள், பிற கால்நடைகள் காக்கப்படும். இந்தச் சட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. இது விவசாயிகளின் வாழக்கையில் ஒளி ஏற்றும்,'' என்றார்.

அதே போல வியாபார நோக்கத்தில் மிருகங்களை பயன்படுத்தப்படக்கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் அடிநாதமாக உள்ளது என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மத்தியில் மூன்றாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதனைகள் என பட்டியலிட ஒன்றும் இல்லாத காரணத்தால், அதை மறைப்பதற்காகவே இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை ஏற்படுத்தியுள்ளதாக திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலி
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog