Breaking

Saturday

இளைஞர் மத்தியில் சமூக நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்கு !


by-காரைதீவு  நிருபர் சகா 

மனித அபிவிருத்தி தாபனமும், கொழும்பு, அமெரிக்க உயர் ஸ்தானிகர் அனுசரணையுடன் இளைஞர்களுடான சமூக நல்லிணக்கம் தொடர்பான செயற்பாட்டினை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இத்திட்டமானது Right to Education for Youth in Ampara District – ( REYAD) என பெயர் இடப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் தொடர் நிகழ்வாக நற்பட்டிமுனை கமுஃஅல் அக்ஸா விதியாலயத்தில்  மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் ரு.டு.அசார்டீன், கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு அதிகாரிகள், கல்முனை பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கல்முனை நீதவான் நீதிமன்ற நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சப்ரீன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறுவர்களின் நன்னடதை மற்றும் முரண்பாடுகளை தவிர்த்தல் தொடர்பாக கீழ் குறிப்பிட்ட தலைப்புகளில் விளக்கமளித்தார்கள்.   

 Right to Education for Youth in Ampara District – (REYAD), இத்திட்டமானது......

மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், மனித ஆளுமை விருத்தி மற்றும் இறைமை உணர்வு என்பவற்றை மதித்து வலுப்படுத்தல். 

அனைத்து தேசங்களிடையிலும் சுதேச, சாதி, தேசிய, சமய மொழி ரீதியான குழுக்களிடையில் புரிந்துணர்வு சகிப்புதன்மை, பால் சமத்துவம், நட்பு என்பவற்றை மேம்படுத்தல். 

சட்ட ஆட்சிக்குட்பட்ட ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமாக ஈடுபட அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கல். 

சமாதானத்தை கட்டியெழுப்புவதோடு அதனை பராமரித்தல்.

மக்கள் மைய நிலைபேறு அபிவிருத்தி மற்றும் சமூக நீதியை மேம்படுத்தல். 

இதில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மனித அபிவிருத்தி தாபனத்தின் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள். 



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog