Breaking

Thursday

கல்முனை ஸாஹிராவின் அதிபராக கல்வி அமைச்சினால் பி.எம்.எம். பதுர்தீன் நியமனம் : எம்.எஸ் முஹம்மட் முட்டுக்கட்டை...!


(அஷ்ரப் ஏ சமத்)

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் விவகாரத்தில்  கல்வி அமைச்சின் பணிப்புரைக்கமைய சகல உத்தியோக பூர்வ ஆவணங்களுடன் நேற்று 24.05.2017 ஆம் திகதி கடமையை பொறுப்பேற்க சென்ற P.M.M. பதுர்தீன் கல்லூரியின் பிரதி அதிபர்களில் ஒருவரான எம்.எஸ்.முஹம்மட் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களினால் கடமையை பொறுப்பேற்க விடாத சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து கல்முனை கல்வி வலயத்துக்கு இருவரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில் P.M.M. பதுர்தீன் மாத்திரம் சமூகமளித்திருந்தார். வலயக் கல்விப் பணிப்பாளர் பல தடவைகள் தொலைபேசி ஊடாக எம்.எஸ். முஹம்மட் அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் கல்லூரியின் அதிபர் கதிரையை விட்டு நகர முடியாமல் உயர் அதிகாரியின் உத்தரவினை உதாசீனம் செய்து விட்டு  அவர் கல்வி வலயத்துக்கு சமூகம் அளிக்க தவறினார்.கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் M.S. அப்துல் ஜலீல் கல்முனை ஸாஹிராவுக்கு அதிபராக கடந்த மூன்று வருடங்களாக அதிபராகக் கடமையாற்றிய P.M.M. பதுர்தீனை 24.05.2017 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் மீள கடமையேற்குமாறு பணித்துள்ளார். இதன் அடிப்படையில் இவர் கல்லூரியை பொறுப்பேற்க முடியும் இருந்த போதிலும் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்திலான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.04.04.2017 ஆம் திகதி பாடசாலை லொக் புத்தகத்தில் "எனக்கு முறையான விடுவிப்பு மாகாண கல்வி அமைச்சிலிருந்து கிடைக்கும் வரையில் கல்முனை கல்வி வலய அலுவலத்தில் கடமையாற்றுவதற்காக தற்காலிகமாக பாடசாலையில் இருந்து இடம் மாற்றம் பெற்றுச் செல்கின்றேன். எனவே பாடசாலையின் அனைத்து பொறுப்புக்களையும், கடமைகளையும் பிரதி அதிபர்களான M.S. முஹம்மட், A.B. முஜீன் ஆகியோரிடம் ஒப்படைத்துவிட்டு செல்கிறேன்" என பதியப்பட்டுள்ளது.பிரதி அதிபர் A.B. முஜீன் விட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் பிரதி அதிபர் M.S. முஹம்மட்  தன்னைத்தானே அதிபராக அறிவித்திருந்தார்.  கடந்த ஒரு மாத காலமாக இவருக்கு எந்த வித உத்தியோகபூர்வ கடிதமும் கல்வி அமைச்சினாலோ அல்லது மாகாண கல்வி அமைச்சினாலோ வழங்கப் பட்டிருக்கவில்லை.இந்நிலையில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் H.U. பிரேமதிலகவினால் 19.05.2017 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் P.M.M. பதுர்தீனை கல்முனை ஸாஹிராவுக்கு அதிபராகக் கடமை ஏற்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டதுடன் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.எனவே சட்ட ரீதியாக சகல விதமான ஆவணங்களுடன் கடமையை பொறுப்பேற்க சென்ற ஒருவரை தடுத்து நிறுத்தி பாடசாலையின் சுமுக நிலைக்கு பங்கம் விளைவிக்கும் இந்த மாதிரியான சட்ட ஒழுங்கினை மீறுகின்ற ஒருவரினை கிழக்கிலங்கையின் பிரபல தேசிய பாடசாலையின் அதிபராக இந்த கல்வி சமூகம் எப்படி அனுமதிக்க முடியும்?இவ்வாறான முறையற்ற முன்மாதிரிகள் கல்லூரியில் நிலைநாட்டப்படுமாக இருந்தால் எதிர்காலத்தில் யார் வேண்டும் என்றாலும் அதிபராக வரலாம். ஓர் சிறு ஆசிரியர் குழு நினைத்தால் ஒருவரை மாலை போட்டு  அதிபராக்கி விடலாம். எத்தனையோ கல்விமான்களை உருவாக்கிய இந்த கல்லூரியின் வரலாற்றில் இந்த இந்தக் கறை படிந்த அத்தியாயத்தினை இந்த கல்வி சமூகம் எழுதப் போகின்றதா?

ஒரு சிறு குழுவின் சுய நலப் போக்கினை, சட்ட ஒழுங்கினை மீறுகின்ற இந்த முறையற்ற நடவடிக்கைகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கு பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்ன கல்வியறிவற்ற ஏமாளிகளா?பிரதேசவாத சிந்தனைக் கொள்கைக்கு அப்பால் அனைவரும் சிந்தித்து கல்லூரியின் சுமுக நிலைக்கும் முன்னேற்றத்துக்குமான பங்களிப்பினை செய்வதற்கு ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog