Breaking

Sunday

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மே மாதத்திற்கான பொதுக் கூட்டடம்...!


(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மே மாதத்திற்கான பொதுக் கூட்டடம் நிர்வாகக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக 20.05.2017 சனிக்கிழமை காலை 09.45 மணிக்கு காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைப்பின் கடந்த கால நிகழ்கால செயற்பாடுகள் தொடர்பாக  விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் நோன்பின்போது இப்தார் நிகழ்வு மற்றும் விசேட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாகவும் அதற்கான ஒழுங்குகளை அதற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் சிறப்பாக செய்வதெனவும் 

தீர்மானிக்கப்பட்டதுடன் விரைவில் நுவரெலியாவுக்கான களப்பயணம் ஒன்றை மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அங்கத்தவர்களின் நலன்கள் தொடர்பாக விரிவான திட்டமிடல்கள் இடம்பெற்றது. அத்துடன் ஊடக அங்கத்தவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் எட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog