Breaking

Saturday

நிந்தவூர் வைத்தியசாலை வீதியின் அவலத்தை கண்டுகொள்ளுமா சம்மந்தப்பட்ட சபை..?


நிந்தவூர் வைத்தியசாலை வீதிக்கு நடுவால் செல்லும் வடிகான் மூடியானது சில மாதங்களாக உடைந்து கிடக்கின்றது. இதனால் அவ்வீதியால் வாகனங்களில் செல்வதும் இரவு நேரங்களில் நடை பயணமாக செல்வதும் கடும் ஆபத்துக்ககுரிய விடையமாகவுள்ளது.

நிந்தவூர் வைத்தியசாலை வீதியானது மக்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் ஓர் முக்கியமான வீதியாகும் இவ்வீதில் தான் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, இரண்டு பிரபல "குர் ஆன் மத்தரசாக்கள், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல், பிரபல பாடசாலைகள் மற்றும் நிந்தவூர் பொழுதுச் சந்தையென பல நிறுவனங்களும் அமைந்துள்ளது இதனால் இவ்வீதியானது மக்கள் பயணம் செய்வதற்கு முக்கியமானதோர் வீதியாகவுள்ளதால் இவ்வீதியில் ஏற்படும் அவலங்களை உடனே சரி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் வீதி அபிவிருத்தி சபை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைக்கும் உள்ளது.

ஆகவே இவ்வீதியின் அவலத்தை உடனே உங்கள் பார்வைக்கு கொண்டுவந்து இவ் அவலத்திலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதோடு இதனை உடன் புணரமைப்பு செய்யுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog