Breaking

Monday

கோணாவத்தை ஆற்றின் கரையோரங்களில் சிரமதானம் (படங்கள் இணைப்பு)


(எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இயற்கை வளம் பொருந்திய கோணாவத்தை ஆற்றினை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு அவ்வாற்றின் இரு கரைகளையும் சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு நேற்று (21) கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.பாயிஸ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ஐ.மயூரன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிசார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ஐ.மயூரன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோரின் தலைமையில் நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டு கோணவத்தை ஆற்றின் இரு மருங்கிலும் சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம், டெங்கு நோய் அபாயம், கோணாவத்தை ஆற்றினை மண்ணிட்டு நிரப்புவதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலகம், பிரதேச சபை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையயம் ஆகியன இணைந்து இச்சிரமதான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog