Breaking

Thursday

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்...!


கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் வாரங்களில் வழங்கப்படும் என கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டால் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய 3080 பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதலாம் வாரமளவில் இடம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கின் 4 ஆயிரத்து 784 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கு அண்மையில் தேசிய முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog