Breaking

Saturday

உலகளாவிய ரீதியில் 99 நாடுகள் மீது ransomware அட்டாக்...!இலங்கைக்கு பாதிப்பா?


உலகளாவிய ரீதியில் 99 நாடுகள் மீது ransomware attack எனப்படும் இணைய வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலினால் இலங்கையின் கணினி கட்டமைப்புகளுக்கு இதுவரையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. 

எப்படியிருப்பினும், கடந்த சில நாட்களாக இலங்கையின் பாதுகாப்பு பிரிவு கணினி கட்டமைப்பு, பாரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெசாக் தினத்திற்கான விடுமுறைகளே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.  

குறித்த தாக்குதல் காரணமாக சம்பந்தம் இல்லாமல் வரும் மின்னஞ்சல்கள் திறப்பதனை தவிர்க்குமாறு கணினி அவசர பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. 

 இதேவேளை, ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த சைபர் தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog