Breaking

Friday

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கவலையளிக்கிறது...!ஹசன் அலி.


(எம்.ஜே.எம்.சஜீத்)

பல்கலைக் கழகத்தில் சுமார் நான்கு வருடங்கள் கற்று பட்டத்தினை நிறைவு செய்துவிட்டு வேலைவாய்ப்புக்காக பாதையோரங்களில் 

நின்றுகொண்டு போராட்டங்களை நடாத்துவது கவலையளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ ஹசன் அலி தெரிவித்தார்.

வேலைவாய்ப்புக்களை கோரி அம்பாரை மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக நடாத்தி வரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண வேலையற்ற  பட்டதாரிகள் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் அனைவராலும் தற்போது கவனம் 

செலுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக் கழகங்களில் பல வருடங்கள் கற்றுவிட்டு பட்டதாரிகள் பாதையோரங்களில் நின்று வேலைவாய்ப்புக் கோருவது கவலையளிக்கிறது.

குறிப்பாக கடந்த ஆட்சியிலே இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களினால் எமது நாடு எதிர்கொண்டுள்ள கடன் சுமையினால் வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் தற்பொதைய அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இருந்தாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் போராட்டங்களை கவனத்திற்கொண்டு அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து சிறந்ததொரு 

தீர்வினை பட்டதாரிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முற்சி செய்ய வேண்டும். இந்தவிடயம் தொடர்பில் நான் எமது நாட்டினுடைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும், அரச உயர் மட்டங்களுக்கு தெளிவுபடுத்தவும் தயாராகவுள்ளேன்.

இன்று பல்கலைக்கழகத்தில் பட்டங்களை நிறைவு செய்து போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளில் அதிகமானவர்களுக்கு 40வயதினையும், தாண்டியுள்ளது. அவர்களில் பலர் திருமணம் 

முடித்து எதுவித வருமானமும் இனறி பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் இன்று வீதியில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அதிகாரத்திலிருக்கின்ற அரசியல்வாதிகள் வேலையற்ற பட்டதாரிகளின் விடயத்தில் மௌனம் காப்பது கவலையளிக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog