Breaking

Saturday

தரம் நிர்ணயம் செய்யப்படாத முகக் கிரீம் வெல்லம்பிட்டியில் சிக்கியது...!


வெல்லம்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றில், வெளிநாடுகளிலிருந்து பாரிய பெரல்களில் கொண்டுவரப்பட்ட, பிரசித்திபெற்ற முக கிரீம் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தரம் நிர்ணயம் செய்யப்படாத குறித்த கிரீம்களை, பிரபல நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சிறு பெட்டிகளில் அடைத்து தயாரிக்கும் வகையிலான 45,000 கிரீம் பெட்டிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்த நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்தார்.

பெட்டிகளில் தலா ரூபா 350 விலை பொறிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர் இந்நிறுவனத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட விதிகளை மீறி சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட குறித்த நிறுவனத்துக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் சட்ட விரோதமான வர்த்தகர்கள், காலாவதியான பொருட்கள் விற்பனை, அரிசி மோசடியில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுஐப் எம் காசிம்

by-thinakaran.lk
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog