Breaking

Sunday

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதி.

எம்.ரீ.எம்.பாாிஸ்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா எதிர் வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி நடை பெறவுள்ளது.

இவ்விழாவினை சிறப்பிக்கும் முகமாக கிராமிய பொருளாதார அலுவல்கள்  பிரதியமைச்சர்  எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின்  கௌரவமான அழைப்பினை ஏற்று  29ஆம் திகதி அன்று காலை 10.00மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேற்படி உத்தியோக பூர்வமான தகவலை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று (18.03.2017) ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது இந்த தகவலை  பாடசாலை அதிபர்,ஆசிரியர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தெரிவித்தார்.
 
பிரதியமைச்சரின் வேண்டு கேளினை ஏற்று முதல் தடவையாக மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியின் ஒரு முஸ்லிம் பாடசாலைக்கு நாட்டின் ஜனாதிபதி ஒருவர் கலந்து கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் நிகழ்வாக இது அரசியல் விமர்சகர்களினாலும்,பொது மக்களினாலும் கருதப்படுகின்றது.

பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் முயற்சியினால் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்;டு விழாவினை  முன்னிட்டு பாடசாலை அபிவிருத்தி பணிக்காக  எட்டு கொடியே ஐம்பது லச்சம் ரூபாய் பணம் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog