Breaking

Tuesday

தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.


எமது பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியானது சரியான முறையில் அமைகின்றபோதுதான் பிள்ளைகளுனுடைய எதிர்காலம் நல்ல முறையில் கல்வியில் வளர்ந்து செல்லக்கூடியதொரு சந்தர்ப்பம் 

ஏற்படும். அந்த வகையில் மிகக்குறுகிய காலத்துக்குள் அதிகமான சாதனைகளை செய்கின்ற ஓர் பாலர் பாடசாலையாக நான் இப்பாடசாலையை பார்க்கின்றேன் என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-

றஸாதிய்யா பாலர் பாடசாலைக்கு தளபாடம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு 2017.02.06ஆந்திகதி-திங்கட்கிழமை அல்-றஸாதிய்யா பாலர் பாடசாலையின் தலைவர் ஏ.ஜீ.எம். அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்... 

இன்றைய காலகட்டத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில் எமது பாடசாலைகளின் நிகழ்வுகளை நடாத்த வேண்டும் என்கின்ற ஏனைய பாடசாலைகளை விட எங்களிடம் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நாங்கள் சிறந்த முறையில் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்த வேண்டுமென்று ஒரு வளர்ந்து வரும் பாலர் பாடசாலையாக அல்-றஸாதிய்யா பாலர் பாடசாலை இருக்கின்றது.

எமது சமூகத்தினை பொறுத்தமட்டில் பெண் பிள்ளைகளினுடைய கல்வி வளர்ச்சியின் வீதம் கூடிய நிலையிலும் ஆண் பிள்ளைகளினுடைய கல்வி வளர்ச்சியின் வீதம் மிகவும் குறைந்த நிலையிலும் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. இதற்கு உதாரணமாக நாங்கள் சென்ற வருட உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளை அவதானித்தால் அறிந்து கொள்ள முடியும்.

எமது மாவட்டத்தினை பொறுத்த மட்டில் எமது முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் அதிகாரம் இல்லை என்றால் நாங்கள் மிகவும் கஸ்டப்பட்டதொரு சமூகமாகவே மாற வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியிருக்கும். எனவே எங்களுக்குள் எதுவிதமான 

அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் அதனை எம்சமூகத்தின் நலன்கருதி மறந்தவர்களாக அனைவரும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக வாழ எம் அனைவருக்கும் அல்லாஹ் துணை இருக்க வேண்டும் என தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக். கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். றம்ஸி, 

கல்குடாத்தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. திபாஸ், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, அல்-றஸாதிய்யா பாலர் பாடசாலையின் செயலாளர் எஸ். சுபைர், ஆசிரியைகளான ஏ.பீ.எப். நஸ்ரின், பீ.எப். ஹலீமா, எம்.எச். பஸ்னா மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.  





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog