Breaking

Monday

வளரும் போது களை பிடுங்க நினைப்பது நியாயமா....!


ஜெம்சித் (ஏ) றகுமான்
மருதமுனை

அரசியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வசந்தம் அலைவரிசையில் ஒளிபரப்பாகும் அதிர்வு அரசியல் நிகழ்ச்சி தனி இடத்தை பிடித்திருக்கிறது.அரசியல்வாதிகளையும்,அரசியல் பிரமுகர்களையும் அழைத்து வாரா வாரம் நடைபெற்று வரும்

 இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் அதனை தொகுத்து வழங்கும் தனராஜ் மற்றும் முஷர்ரப் ஆகியோரின் அயராத முயற்சியும் இருவக்குமிடையிலான புரிந்துணர்வும் என்பதை நிகழ்ச்சியை பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறிய தென்றால் எந்த வண்டி ஓடும் என்பதை போல அதிர்வு நிகழ்ச்சியை நடத்தும் தனராஜ் மற்றும் முஷர்ரப் ஆகியோரின் சமமான திறமையின் பிரகாரமே அதிர்வு எனும் அரசியல் நிகழ்ச்சி சிறப்படைந்து மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய காரணமாக அமைந்திருக்கிறது.

அதிர்வு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முஷர்ரப்பை பொறுத்தவரையில் தேடல்களை அதிகமாக கொண்டவர்.எனக் கூறுவது மிகையாகாது.இன்றைய காலகட்டங்களில் சமூகத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து மக்கள் சார்பான 

கேள்விகளை தொகுத்து அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகளிடமும்,அரசியல் பிரமுகர்களிடமும் கேட்கும் வல்லமை பெற்றவராக திகழ்வது அவரின் தேடலை எமக்கு தெளிவுபடுத்துகிறது.

அதிர்வு நிகழ்ச்சி சம்பந்தமாகவும்,முஷர்ரப்பை தவறாக விமர்சித்தும் செய்தி ஒன்றை இணையத்தளத்தில் வாசிக்க முடிந்தது.குறித்த கட்டுரையானது தனராஜை வைத்து முஷர்ரப்பை விமர்சித்திருக்கிறது.அதிர்வு நிகழ்ச்சியில் தனராஜ் குறைவான கேள்விகள் கேட்பதாகவும் முஷர்ரப் அதிகமான கேள்விகள் கேட்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.

அதிர்வு நிகழ்ச்சியை பார்க்கின்ற போது இரண்டு தொகுப்பார்களும் 
ஏற்கனவே தயார் செய்யப்பட்டு வைத்திருந்த கேள்விகளை அரசியல்வாதிகளிடம் கேட்கின்றனர்.முஷர்ரப் அதிகமாக கேள்விகள் கேட்கின்றார் எனின் குறித்த நிகழ்ச்சிக்கான அவரின் தயார்படுத்தலையும்,தேடலையும்,சமூக சிந்தனையையும் எமக்கு எடுத்துக்காட்டுகிறது. 

கடந்த ஞாயிறு(2017.03.19) அன்று நடைபெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.சுமேந்திரனிடம் அதிமான கேள்விகளை முஷர்ரப் கேட்டதாகவும் தனராஜ்ஜிற்கு வாய்ப்பு குறைவாக வழங்கப்பட்டதாகவும் ஒரு தமிழர் என்ற வகையில் அவரது சமூகத்தைச் சார்ந்த

விடயங்களை, தமிழ் மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளை, உண்ணாவிரதம்
போன்றன தொடர்பில் நன்கு அறிந்தவர்
என்ற அடிப்படையில் தனராஜ்

முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும் என அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.ஊடகவியலாளர் என்பவர் குறித்த ஒரு சமூகத்தை மாத்திரம் அறிந்திருக்க கூடாது நாட்டிலே வாழும்

 அனைத்து சமூகத்தின் பிரச்சினைகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.இன,மத,மொழி என்பனவற்றை கடந்து வரும் காற்றை போலவே ஒரு ஊடவியலாளர் அனைத்து சமூகங்களின் 

பிரச்சினைகளையும் சுவாசிக்க கூடியவராக இருக்க வேண்டும்.தமிழரின் பிரச்சினைகளை தமிழர் கேட்க வேண்டும் என நினைப்பது,முஸ்லிம்களின் பிரச்சினைகளை முஸ்லிம் 

ஊடகவியலாளர் கேட்க வேண்டும் என நினைப்பதும் ஒரு ஊடகவியலாளர் ஏனைய சமூகங்களை சிந்திக்காது தான் சார்ந்த சமூகத்தை மாத்திரம் ஒரு பக்க சார்பாக சிந்திக்க வேண்டும் என கூறுவதை போல் அமைந்திருக்கிறது. 

அதிர்வு போன்ற அரசியல் நிகழ்ச்சிகளை பொறுத்தவரை ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட கேள்விகளுக்கு மேலதிகமாக சந்தர்ப்ப சூழ்நிலைகளிற்கு ஏற்ப கேள்விகள் கேட்கப்படும் போது தொகுப்பாளர் முஷர்ரப் அதிகமான கேள்விகளை கேட்கும் நிலையும் ஏற்படுவதை நிகழ்ச்சியை பார்க்கும் போது 

அறியமுடிகிறது.அது அவரின் தனிப்பட்ட திறமையின் வெளிப்பாடே தவிர மற்ற தொகுப்பாளரை முந்திக் கொண்டு அல்லது சந்தர்ப்பம் வழங்காமல் முஷர்ரப் மட்டும் முன்னிலையாகின்றார் என்பது பொருளல்ல.சில வேளை முஷர்ரப் அவ்வாறான கேள்விகளை கேட்காமல் இருந்தால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நேயர்களை சென்றடையாது.

கேள்வி கேட்பவனை விமர்சிப்பதன் மூலம் அவனின் திறமைகளை மழுங்கடித்து விட முடியும் என நினைத்து விடக் கூடாது.
முஷர்ரப் போன்ற சமூக சிந்தனை கொண்ட இளம் 

ஊடகவியலாளர்கள் வளர்ந்து வரும் போது அவர்களை பிடுங்கி எறிய நினைக்க கூடாது.மாறாக சமூக சிந்தனை கொண்ட அவரை போன்ற ஊடகவியலாளர்களை தட்டிக் கொடுத்து வளர்த்துவிட முயற்சி செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog