Breaking

Monday

கோரளைப்பற்று பிரதேச சபைக்கு திண்மக்கழிவகற்றும் உழவு இயந்திரம் மற்றும் நீர்த் தாங்கி என்பன வழங்கி வைப்பு.



மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச சபைக்கு   திண்மக்கழிவகற்றும் உழவு இயந்திரம் மற்றும்  நீர்த் தாங்கி என்பன கையளிக்கும் நிகழ்வு 2017.03.18ஆந்திகதி-ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். சஹாப்தீன் தலைமையில்  கோறளைப்பற்று பிரதேச சபையில் நடைபெற்றது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். சஹாப்தீனிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் கோ. கருணாகரன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களும் கலந்துகொண்டார். கோரளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்த நீர்த்தாங்கி பாரிய நன்மையாக அப்பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog