Breaking

Saturday

சவளக்கடை பொலிஸ் பிரிவில் விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை

(எம்.எம்.ஜபீர்)


சவளக்கடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுவரும் விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் பிரதேசத்திலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களை தெளிவுபடுத்துவதற்கான கூட்டம் (14) சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், வங்கிகள், பணப்பறிமாற்ற நிலையங்கள் போன்றவற்றில் சீ.சீ.ரி.வீ கமராக்களை பொருத்துவதனூடாக பிரதேசத்தில் இடம்பெறும் குற்றசெயல்கள், மதுபோதையில் இடம்பெறும் விபத்துகள் போன்றவற்றை குறைத்துக் கொள்வது தொடர்பில் வீடியோ காட்சிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதேவேளை வீதிகளில் நடமாடும் கட்டகாலி கால்நடைகளினால் ஏற்படும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காக கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதெனவும், முச்சக்கரவண்டி மற்றும் வாகன உரிமையாளர்கள் சாரதி அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை வழங்கும் வாகன உரிமையாளர்களுக்கு கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்வதெனவும் அறிவுறுத்தப்பட்டதுடன், வீதி சமிக்கைகளை கடைப்பிடிப்பது தொடர்பிலும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், வாகனங்களின் உரிமையாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், ஆலய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog