Breaking

Wednesday

கிழித்தெறியப்படவேண்டிய மு.கா யாப்பும் ஓய்வுபெறும் தலைவர் ஹக்கீமும்.


Shifaan BM

மறைந்த மாணிக்கம் மாமனிதன் மர்ஹூம்
எம்.எச்.எம் அஷ்ரபின் நேரடி வழிகாட்டலின் பேரில் வரையப்பட்ட மு.கா யாப்பு இன்று பல

கோணங்களிலும் களவாடப்பட்டு புதிதாக உருமாறி கறைபடிந்ததாக மாறிவிட்டது. ஒரு சமூகத்தின் எழுச்சிக்காக குர் ஆன் , ஹதீஸ் நெறி வழி முறையில் இயக்கவேண்டியதாகக்
காட்டிக்கொண்ட யாப்பு இன்று தத்தமது சுயநலங்களுக்காக சோடைபோன சரித்திரம் காண மாமனிதனின் ஆன்மாவும் சகிக்காது.

மு.கா என்ற பாரிய இயக்கத்தின் புத்திஜீவிகளுள் மிகக் குறுகிய சிலரே ஆங்கிலப்புலமை வாய்ந்தவர்களாக இருந்தும், இந்த இயக்கத்துக்குள் பாரிய வெடிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும்
யாப்பானது அனைவரும் விளங்கிக் கொள்ளும் தாய்மொழியில் மாற்றம்

பெற்றிராமை துரதிஸ்டமே. உச்சபீட அங்கத்தவர்கள் தலைமை சொல்வதையெல்லாம் கோயில் மாடுகள்போல் தலையசைத்து ஆமா

சாமி போடக் காரணமாக இருந்தமையும் இந்த யாப்பு தொடர்பான மொழிப்புலமை இன்மையாகவும் கூட இருக்கலாம். மேலும் மேலும் வாக்களித்துவந்த மக்களுக்கு கட்சி
யாப்புத்தொடர்பில் விழிப்புணர்வில்லாமை அவர்களின் அறியாமையுமேயாகும்.

குறித்ததொரு கட்சியுடையதோ அல்லது நிறுவனத்தினுடைய யாப்பானது என்னென்ன விதிகளுடன் எழுதப்பட்டுள்ளதோ அதே விதிகளை பின்பற்றி நடத்தலே ஜனநாயகமாகும்.ஆனால் யாப்புக்குப் புறம்பான செயற்பாடுகளும் கபளீகரங்களும்
அநியாயமாகும். இதனைத்தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது மகா மடத்தனமாகும். இங்கு குறிப்பிடப்பட்ட படத்தில் இருக்கும் அத்தியாயம் 5 இன்

படத்துக்கு உகந்ததாக கட்சியின் தலைமையே இல்லாமையானது மு.கா யாப்பை வரைந்தவருக்கும் அதனை நெறிப்படுத்திய மாதலைவனுக்கும் செய்யும்
கொடுமையாகும்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஹக்கீம் அதிகாரம் மிக்க செயளாளர்பதவி

தற்காலிகமானது எனக்கூறி இருப்பதானது யாப்பை இன்னுமின்னும் கேலிக்கூத்தாக்கி ,தனது காரியம் முடிந்தவுடன் ஹக்கீம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் டயஸ்போராக்களுக்கு (புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு)கிழக்கை விலைபேசி விற்றுவிட்டு 

,சிறுபன்மையிலும் சிறுபான்மையான சமூகமாக முஸ்லிம்களை மாற்றி தனது பதவிநிலை ஓய்வைஅறிவித்துவிட்டு ஒய்யாரமாக
மேற்கு மலையடிவாரம் ஒதுங்குவதற்குண்டான முயற்சியே அன்றி வேறொன்றில்லை.

அந்தத்தறுவாயில் சம்பளத்தில் சங்கமமாகி தற்காலிக செயளாளராக ஹக்கீமுக்குக்குப் பக்கத்திலும் அன்றி தொலைதூரத்தில் ஏதோ ஓர்

மூலையில் இருக்கும் மன்சூர் ஏ காதரிடம் கட்சி சங்கமமாவது நிச்சயம்.ஆகவே தான் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு தனது தேவைக்கு தகுந்தாற்போல் இசைந்து வளைந்து தலைவரின் சாணக்யத்துக்குள்

சங்கமமாகி மடியில் தவழ்ந்து , உச்ச பீட
உறுப்பினர்களின் மதியை மயக்கி வைத்திருக்கும் திருகுதாழங்களுடன்

கூடிய புதிய யாப்பானது இன்னும் இன்னும் இக்கட்சிக்குத் தேவையில்லை. கிழித்தெறியப்படுதலே சிறப்பு.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog