Breaking

Saturday

ஹைட்ரோ கார்பன் திட்டம் நாட்டின் நலனுக்கு தேவை....!இல.கணேசன்


ஹைட்ரோ கார்பன் திட்டம் நாட்டின் நலனுக்கு தேவைப்படுகிறது. இத்திட்டம் விவசாயிகளின் பங்களிப்போடு தான் செயல்படுத்தப்பட இருக்கிறது என இல.கணேசன் எம்.பி.கூறினார்.

மதுரைக்கு இன்று காலை இல. கணேசன் எம்.பி., வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது நல்லதல்ல. நான் விவசாயத்துக்கோ, இத்திட்டத்துக்கோ எதிரானவன் அல்ல.

நம் நாட்டின் வளம் பற்றி அறிஞர் அண்ணா கூட தேர்தல் பிரசாரத்தின் போது “தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி” என்று பிரசாரம் செய்தார். இதே போல “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.....” என எம்.ஜி. ஆரும் பாடியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் நாட்டின் நலனுக்கு தேவைப்படுகிறது. இத்திட்டம் விவசாயிகளின் பங்களிப்போடு தான் செயல்படுத்தப்பட இருக்கிறது. நிலம் கொடுப்பவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதோடு, அந்த ஆலையில் பங்குதாரராகவும் ஆக்க திட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்த நிலையை அடையும்.

நம் நாட்டில் பல வளங்கள் இருந்தும் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். இனி வெளிநாட்டில் கை ஏந்தக்கூடாது என்பதால் தான் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog